பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய உரிமைகள் – சர்வதேச மகளிர் தினம்

by Column Editor

இந்தியாவில் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க பல சட்டங்கள் அமலில் உள்ளன. அத்தகைய உரிமைகளை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயமான ஒன்று.

சம ஊதிய சட்டம் 1976

உலக முழுவதுமே ஊதிய ஏற்றத்தாழ்வு பிரச்சினையை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பல துறைகளில் இந்த பிரச்சினை உள்ளது. எனவே தான் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம ஊதியத்தை உறுதி செய்யும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தக் தடுப்பு சட்டம் 2013

பணியிடத்த்தில் பாலியல் தொல்லையால் பெண்கள் பாதிக்கபடுகிறார்கள். இதில், ஆபாசமாக பேசுதல், புகைப்படங்களை காட்டுதல், போன்ற பல நடத்தைக்கு ஆகியவற்றிற்கு தண்டனை வழங்கப்படுகிறது.

இந்திய விவாகரத்து சட்டம் 2001

இந்த சட்டமானது திருமணமான அல்லது திருமணம் செய்யத் திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய சட்டம். 2001-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் விவகாரத்து பெறுவதை எளிமையாக்குகிறது.இந்து திருமண சட்டம் 1995 பிரிவு 13பி-டின் படி ஆணும், பெண்ணும் பரஸ்பரம் விவாகரத்து கோரினால், அவர்கள் கட்டாயம் ஓராண்டு சேர்ந்து வாழ்த்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.ஆனால், இந்திய விவாகரத்து சட்டம் வழக்கின் சூழலுக்கு ஏற்ப ஓராண்டுகள் இணைந்து வாழாத தம்பதிக்கும் விவாகரத்து வழங்க அனுமதி அளிக்கிறது.

கர்ப்ப காலத்தின் மருத்துவ முடிவு சட்டம் 1971

இந்தியாவில் கருக்கலைப்பானது சில நேரங்களில் சட்ட ரீதியாக செய்யலாம். 1971ன் படி சட்டரீதியான கருக்கலைப்புகள் சில நிபந்தனைகளின் கீழ் மட்டுமே செய்யப்படுகின்றன.

கர்ப்பத்தின் தொடர்ச்சியானது தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. உடல் அல்லது மன ஆரோக்கியத்தில் கடுமையான காயத்தை ஏற்படுத்துகிறது.

குடும்ப வன்முறைக்கு எதிரான உரிமை 2005

இந்தியாவில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என பாகுபாடின்றி பெண்கள் அனைவருக்கும் உபயோகமாகக்கூடிய சட்டம் இது தான். 2005-ம் ஆண்டு குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் மூலம் குடும்ப வன்முறைக்கு எதிரான உரிமையைப் பெற ஒவ்வொரு பெண்ணும் உரிமை பெற்றனர்.மேலும், குடும்ப வன்முறை என்பது உடல் ரீதியான துஷ்பிரயோகம் மட்டுமின்றி மன, பாலியல் மற்றும் பொருளாதார துஷ்பிரயோகங்களையும் உள்ளடக்கியது.

Related Posts

Leave a Comment