நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடுவதால் என்ன நடக்கும்? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

by Column Editor

நாம் அனைவருக்கும் பிடித்த மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் கொய்யா. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர் சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன.

மிக குறைந்த விலையில் கிடைக்கும் இந்த பழத்தில் மட்டும் இல்லாமல் இலை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டுள்ளது. இத்தகைய ஆரோக்கியம் மிக்க பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..

நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது.

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளதால் இவை குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்கிறது. தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன.

இதைப் போக்க உணவுக்குப் பின் கொய்யாவை சாப்பிடலாம். மேலும் கல்லீரலைப் பலப்படுத்த அடிக்கடி கொய்யாப்பழத்தை உண்பது நல்லது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது.

சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிடுவது நல்லது. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும்.

Related Posts

Leave a Comment