விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ‘பீஸ்ட்’ அப்டேட்… இன்று மாலை வெளியாகிறது!

by Column Editor

இன்று மாலை பீஸ்ட் படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கத்தி, மாஸ்டர் படங்களை அடுத்து அனிருத் இந்தப் படத்தில் விஜய் உடன் கூட்டணி அமைக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லீ, யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

பீஸ்ட் படத்தின் அப்டேட் வெகு நாட்களாக வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டள்ளது. இதை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இப்போதே கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர்.

பீஸ்ட் படத்தை அடுத்து விஜய் இயக்குனர் வம்சி படைப்பள்ளி உடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

Related Posts

Leave a Comment