ரேஷன் கடைகளில் இனி கேஸ் சிலிண்டர்.. மத்திய அரசு ஒப்புதல்…

by Lifestyle Editor

நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் முறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக சமையல் எரிவாயுவும் மாறிவிட்டது. ஆனால் கேஸ் சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசு வழங்கும் மானியத்துடன் சிலிண்டர் விலை ரூ. 1000 த்தை நெருங்கிவிட்டது. கேஸ் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ரேஷன் கடைகளில் குறைந்த எடையுள்ள சிலிண்டர்களை விற்பனை செய்ய மத்திய அரசு அலோசித்து வருகிறது.

உணவு மற்றும் பொது விநியோகத்துறை சார்பில் நாடு முழுவதும் செயல்படும் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி வழங்கப்படுகிறது. மேலும் பண்டிகை கால பரிசு பொருள்கள், நிவாரண பொருட்கள் போன்றவையும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமையல் சிலிண்டர்களும் இனி ரேஷன் கடைகள் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேணும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ரேஷன் டீலர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதுகுறித்து தொடர்ந்து ஆலோசித்து வந்த மத்திய அரசு தற்போது அதற்கான ஒப்புதல் அளித்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கொண்டு ரேஷன் கடைகளில் சிறிய அளவிலான கேஸ் சிலிண்டர்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு நடத்திய மெய்நிகர் ஆலோசனைக் கூட்டத்திலும், வரவேற்பு கிடைத்தது. அதன்படி, விரைவில் 5 கிலோ, 10 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர்கள் ரேஷன் கடைகள் மூலமாகப் பொதுமக்களுக்கு வழங்கப்படும்என கூறப்படுகிறது. இருப்பினும் சிலிண்டர் விலை குறித்த தகவல்கள் தெரியவில்லை. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment