விஜய், அஜித் இருவரில் தன் படத்தில் வில்லனாக யார் நடித்தால் நன்றாக இருக்கும்- சிம்புவே கூறிய விஷயம்

by Column Editor
0 comment

நடிகர் சிம்பு இனி டாக்டர் சிம்புவாக அழைக்கப்பட இருக்கிறார். இந்த தகவல் சிம்பு ரசிகர்களுக்கு படு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது, சாதாரணமான நேரமாக இருந்திருந்தால் அவர்களது கொண்டாட்டமே வேறலெவலில் இருந்திருக்கும்.

கொரோனா லாக் டவுனை பயன்படுத்தி அவர் புதிய மனிதராக மாறியிருப்பது பல நல்ல விஷயங்களை அவருக்கு கொண்டு வருகிறது.

மாநாடு படத்தின் மாபெறும் வெற்றிக்கு பிறகு சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் விண்ணைத்தாண்டி வருவாயா பட ரிலீஸின் போது சிம்பு கொடுத்த ஒரு பேட்டி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், அஜித், விஜய், ரஜினி, கமல் இதில் யார் உங்களுடைய படத்தில் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று சிம்புவிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு சிம்பு, இவர்கள் 4 பேரும் என்னைவிட அனுபவம் கொண்டவர்கள். இவர்கள் என் படத்தில் வில்லனாக நடிப்பது சரியாக இருக்காது, மாறாக அவர்களது படத்தில் வில்லனாக நடிக்க கூப்பிட்டால் நான் நடிப்பேன் என கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment