நயன்தாராவின் கனெக்ட்டில் பிரபல நடிகர்… படக்குழு அறிவிப்பு !

by Column Editor

நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.‌

‘மாயா’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் புதிய படம் ‘கனெக்ட்’. நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை அவரின் சொந்த நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். ஹாரர் பாணியில் உருவாகும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் விரைவில் துவங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல நடிகரான சத்யராஜ் இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்பை படக்குழு இன்று போஸ்டராக வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் சத்யராஜ் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment