முகேன் ராவ், சூரி, பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள ‘வேலன்’ பட ட்ரைய்லர் வெளியானது!

by Column Editor

முகேன் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள வேலன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் முகேன் ராவ். தற்போது முகேன் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் கவின் மூர்த்தி என்பவர் இயக்கத்தில் ‘வேலன்’ என்ற படத்தில் முகேன் நடித்துள்ளார். இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் பிரபு முகேனின் தந்தையாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நகரத்து கதாநாயகனுக்கும், கிராமத்து கதாநாயகிக்கு இடையே உள்ள காதலை மையப்படுத்திய படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஸ்கைன் மேன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்த படம் வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளது.

இன்று வேலன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் முகேன், பிரபு, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். சூரி பேசிய போது வருத்தப்படாத வாலிபர் சங்க படத்தின் நாட்களை நினைவு கூர்ந்தார். படத்தின் ட்ரைலரை நடிகர் வெளியிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment