இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா

by Lifestyle Editor

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் உலக அளவில் பரவக் கூடியது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து விமான நிலையங்களில் வரும் பயணிகளை சோதனைக்குட்படுத்தி தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒரேநாளில் 2796 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அத்துடன் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 99,155 ஆக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேரளாவில் 263 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment