மாநாடு படைத்தை சாதனை! ஒன்றிணைந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழுவினர்கள்

by Column Editor

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாநாடு. இந்த திரைப்படம் கடந்த 25-ம் திகதியில் வெளியாகி இருந்தது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றிக்கு மாநாடு படக்குழுவினர் ஒன்றிணைந்து ரசிகர்களுக்கு வீடியோவின் மூலம் நன்றி தெரிவித்துள்ளனர்.

அந்த வீடியோவில் வெங்கட் பிரபு, சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளனர். இணையத்தில் வெளியான இந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

Related Posts

Leave a Comment