காவலர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய போதை இளைஞர்கள்.!

by Lifestyle Editor

சென்னையில் உள்ள கொடுங்கையூர் காவல் துறையினர், நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இதன்போது, கிருஷ்ணமூர்த்தி நகர் தெருவில் வாலிபர்கள் பொதுமக்களிடையே தகராறு செய்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள், மதுபானம் அருந்திவிட்டு தகராறு செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று தட்டிக்கேட்ட கண்காணிப்பு காவல் துறையினர், வாலிபர்களை எச்சரித்து அங்கிருந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், காவல் துறையினர் மற்றும் அவர்களின் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர், அங்கிருந்து அனைவரும் தப்பி சென்ற நிலையில், காவல் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தகவலை அறிந்து விரைந்து சென்ற கூடுதல் காவல் துறையினர், 3 வாலிபர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் வியாசர்பாடி எம்.கே.பி நகர் பகுதியை சார்ந்த மார்ட்டின் (வயது 24), ஜான் ஆல்வின் (வயது 23), கொடுங்கையூரை சார்ந்த கலைச்செல்வன் (வயது 27) என்பது தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment