எதிர்பார்ப்பை எகிற வைத்த Spiderman : No Way Home, மீண்டும் வருவார்களா பழைய SpiderMan-கள்..

by Column Editor

Marvel நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட திரைப்படம் என்றால் அது Spiderman : No Way Home திரைப்படமாக தான் இருக்க முடியும். டாம் ஹொலண்ட் ஸ்பைடர்மேனாக நடித்துள்ள இப்படத்தை உலககெங்கிலும் உள்ள ரசிகர்கள் திரையரங்கில் காண ஆவலோடு உள்ளனர்.

இப்படம் Spiderman : Homecoming மற்றும் Spiderman : Far From Home திரைப்படங்களின் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ளது. குறிப்பாக Spiderman : Far From Home இதுவரை வெளியான Spiderman திரைப்படங்களில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படமாக இருக்கிறது.

டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ள Spiderman : No Way Home திரைப்படம் இந்தியளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் நேற்று நடத்த இப்படத்தின் Fan Event-ல் Spiderman : No Way Home இரண்டாவது ட்ரைலர் வெளியானது. ஏற்கனவே இப்படத்தின் முதல் ட்ரைலர் வெளியாகி ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த இரண்டாவது ட்ரைலரை அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.அதற்கு முக்கிய காரணமாக இருப்பதே Tobey Maguire மற்றும் Andrew Garfield ஸ்பைடர்மேன் வேர்ஷன்ஸ் தான். ஆம் No Way Home திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் Doctor Strange-யிடம் டாம் ஹொலண்ட் உதவியை நாடி செல்கிறார், அவர் செய்யும் குளறுபடியால் மற்ற யூனிவெர்ஸ் வில்லன்களான Dr. Otto Octavius, Green Goblin, Electro, Sandman, Lizard உள்ளிட்டோர் தற்போது டாம் ஹொலண்ட் ஸ்பைடர்மேனுக்கு வில்லனாக மாறிவிடுகிறார்கள். இந்த விஷயம் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அனைவருக்கும் முதல் ட்ரைலர் வெளியான போதே தெரிந்துவிட்டது.

ஆனால் ரசிகர்கள் அனைவரும் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ட்ரைலரில் எதிர்பார்ப்பதே Tobey Maguire மற்றும் Andrew Garfield வேர்ஷன் ஸ்பைடர்மேன்களை தான். இப்படி இருக்கையில் தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரில் முடிந்தளவு Tobey Maguire மற்றும் Andrew Garfield காட்டாமல் பூசி மழுப்பியுள்ளனர் படக்குழு என்றே கூறலாம்.ஆம் இப்பொது வெளியாகியுள்ள ட்ரைலரில் Tobey Maguire மற்றும் Andrew Garfield வரும் காட்சிகளை நீக்கியுள்ளதை ரசிகர்கள் கண்டு பிடித்துவிட்டனர். அந்த வகையில் Lizard அடிவாங்குவது (Brazil Version) மற்றும் நீக்கப்படாத Andrew Garfield உள்ளிட்ட காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பழைய SpiderMan-கள் மீண்டும் வருவதை உறுதி செய்துள்ளது.

படக்குழு Avengers: Endgame-ல் மாயமான சூப்பர் ஹீரோக்கள் Doctor Strange-ன் Portal மூலமாக மீண்டும் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தியதை போல Spiderman : No Way Home-லிலும் காட்ட நினைப்பது நன்றாக தெரிந்துள்ளது. இன்னும் Spiderman : No Way Home வெளியாக ஒரு மாதமே இருக்கும் நிலையில் எந்தளவிற்கு இதை மறைத்து வைப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Related Posts

Leave a Comment