விக்ரமின் ‘மகான்’ – பொங்கலுக்கு ஓடிடியில் வெளியாகும்

by Column Editor

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘மகான்’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ மகான்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம் கேங்ஸ்டராகவும்இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சின்ஹா, சனந்த் ரெட்டி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் பிரொக்ஷன் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஒடிடித்தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி இப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இப்படம் வரும் பொங்கலுக்கு ஒடிடியில் வெளியாக உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment