207
இளைய தளபதி விஜய், அப்பா இயக்குனர் என்பதால் நிறைய வாய்ப்புகள் கிடைத்தாலும் ஆரம்பத்தில் பல மோசமான விமர்சனங்களுக்கு ஆளானார்.
ஆனால் மோசமான விமர்சனம் கொடுத்தவர்களையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு பெரிய இடத்தில் இருக்கிறார் விஜய். அவரை வாழ்க்கையில் உதாரணமாக எடுத்துக் கொண்டு வாழும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஜீ தமிழில் சர்வைவர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது, இதில் விஜய்யின் தம்பியும், நடிகருமான விக்ராந்த் பங்குபெற்று வருகிறார்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் அவர், தனது அண்ணன் விஜய்யை நினைத்து பெருமை கொள்கிறார். அவர் நிறைய கஷ்டமான பாதைகள் கடந்து தான் இந்த இடத்தை பிடித்துள்ளார் என பேசியுள்ளார்.