அண்ணாத்த ரஜினியை தொடர்ந்து முன்னணி பிரபலத்துக்கும் தங்கையாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்! யாருக்குனு பார்த்தீங்களா!

by News Editor

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். மேலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்தது. கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் தங்கை கதாபாத்திரம்தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாத்த படத்தைப் போலவே தெலுங்கிலும் கீர்த்தி சுரேஷ்க்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதாவது அவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்கிறார். சிரஞ்சீவி அடுத்ததாக தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்ற வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக முக்கிய கதாபாத்திரத்தில் லட்சுமிமேனன் நடித்து இருந்தார். இந்நிலையில் தெலுங்கு ரீமேக்கில் அவரது கதாபாத்திரத்தில் ஹீரோ சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த தகவல் தற்போது பரவி வருகிறது.

Related Posts

Leave a Comment