முதன்முறையாக.. புனீத் ராஜ்குமாரின் இரு கண்களால் பார்வை பெற்ற நால்வர்! மருத்துவ உலகில் சாதனை!!

by News Editor

பிரபல கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு, உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் புனித உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புனித் ராஜ்குமார் இறப்பதற்கு முன்பே தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்திருந்த நிலையில், மறைவிற்குப் பின்பு அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது. தானம் அளிக்கப்பட்ட அவரது கண்களைக் கொண்டு தற்போது நான்கு பேர் பார்வை பெற்றுள்ளனர். பொதுவாகவே கண்கள் இரண்டு பேருக்கே பொருத்தப்படும். ஆனால்
கர்நாடக மாநிலத்திலேயே முதல் முறையாக, புதிய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நான்கு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளதாம்.

அதாவது கருவிழியை இரண்டு துண்டுகளாக்கி, முதல் பாதி ஒருவருக்கும், மற்றொரு பாதி மற்றவருக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது. நான்கு பேரும் தற்போது நன்றாக உள்ளனர். இந்த நான்கு அறுவை சிகிச்சையும் கடந்த 30ஆம் தேதியே நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment