மருதாணி இலையின் மருத்துவ குணங்கள்

by Lifestyle Editor

மருதாணி இலையைக் கொண்டு வந்து அரைத்துச் சிறுசிறு அடைகளாகத்தட்டி நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.

தலைக்குப் பயன்படுத்தும் சுத்தமான எண்ணெயில் இவைகளைப் போட்டு சில நாட்கள் அப்படியே ஊறவிட்டு அதன் பின்னர் அதனை அடுப்பிலேற்றி காய்ச்சி பத்திரப்படுத்திக் கொண்டு, தினசரி தலைக்குத் தேய்த்து வந்தால் முடி நீளமாக வளரும் அத்துடன் கண்கள் நல்ல குளிர்ச்சி பெறும்.

ஐந்து கிராம் மருதாணி இலையுடன் ஐந்து மிளகு ஒரு பூண்டுப்பல் சேர்த்து அம்மியில் வைத்து அரைத்தெடுத்துக் கொள்ளவும். அதனை காலையில் மாத்திரம் சாப்பிடவும். இதுபோன்று ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் மேகத் தழும்புகள் மறைந்துவிடும். மருந்துண்ணும் நாட்களில் உப்பு இல்லா பத்தியம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அம்மை நோய் கண்டவருக்கு மருதாணி இலையைக் கொண்டு வந்து அரைத்துக் கால் பாதங்கள் இரண்டிலும் வைத்துக் கட்டலாம். இதனால் அம்மை நோயினால் கண்களுக்குப் பாதிப்பும் கெடுதியும் ஏற்படாமல் பாது காத்துக் கொள்ளலாம்.

உடலில் அதிகமாக சூடு இருந்தால் உடல் சூட்டினை தணிக்க இரவில் தலையணையின் கீழ் இதன் பூவை வைத்துப் படுக்கலாம். இதனால் உடல் வெப்பம் தணியும், சூட்டினால் உண்டாகும் களைப்பும் நீங்கும்.

Related Posts

Leave a Comment