தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் – 50 கிராம்
பூண்டு – 15 பல்
புளி – 1 எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி விதை – 3 டேபிள் ஸ்பூன்
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி – 1 டீஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு – 1 டீ ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீ ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கொத்தமல்லி விதை, மிளகு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொன்னறிமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
அவை நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
தேவையான அளவு புளியை எடுத்து தண்ணீர் சேர்த்து கரைத்து கரைசலை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாக்களை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
பிறகு கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை அதில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 20 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
இதற்கிடையில் மற்றொரு அடுப்பில் வாணலி வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
இப்போது தாளிப்பை கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மிளகு குழம்பு தயார்…