75
தேவையான பொருட்கள்:
இறால் – 1/4 கிலோ
மிளகாய்த் தூள் – 2 தே.கரண்டி
மல்லித் தூள் – 3 தே.கரண்டி
தேங்காய் – 1/2 மூடி
சோம்பு – 2 தேக்கரண்டி
தாளிப்பு வடகம் – பாதி உருண்டை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 6 தேக்கரண்டி
செய்முறை:
இறாலை கழுவி சுத்தப்படுத்தவும்.
தேங்காய். சோம்பு சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலியில் 6 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் வடகம் போடவும்.
வடகம் பொரிந்ததும் இறாலைப் போடவும்.
மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி சேர்க்கவும்.
4 அரைத்த தேங்காய், சோம்பு விழுதை சேர்க்கவும்.
வாணலியை மூடி வைத்து வேகவிடவும்.
இறால் வெந்து எண்ணெய் தெளிந்ததும் இறக்கினால் சுவையான இறால் எண்ணெய் குழம்பு தயார்.