குரூப் 2 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல் ..

by Lifestyle Editor

குரூப்-2 & 2A முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை 17.11.2022 முதல் 16.12.2022 வரை இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2 & 2A முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை 17.11.2022 முதல் 16.12.2022 வரை இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில்கொண்டு. அனைத்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன இ-சேவை மையங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேவைப்படும் இ-சேவை மையங்களில் கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, விண்ணப்பதாரர்கள் இதனை பயன்படுத்தி தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான உதவிக்கு அரசு கேபிள் டிவி நிறுவன கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911 ஐ தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Posts

Leave a Comment