நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி …

by Lifestyle Editor

நடிகை சமந்தா உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மயோசிடிஸ் என்கிற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் சமந்தாவிற்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சமந்தா பல காலமாக ஸ்கின் நோய் பிரச்சனையினால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அடிக்கடி படப்பிடிப்புகளில் அவர் பங்கேற்க முடியாமல் போனது. இந்த நிலையில் தற்போது மயோசிடிஸ் பிரச்சனையினால் அவர் சிகிச்சை பெற்று வரும் தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. இந்த நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமந்தாவின் முன்னாள் கணவர் பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் நிலையில் சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடையை வைத்திருக்கிறது.

Related Posts

Leave a Comment