பேபி கார்ன்ஸ் ப்ரை செய்வது எப்படி ?

by Lifestyle Editor

பேபி கார்ன்ஸ் ப்ரை செய்ய தேவையான பொருட்கள்:

பிஞ்சு மக்காசோளம் – 6
மைதா மாவு – 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு -1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் -1டீஸ்பூன்
மிளகாய்த்தூள்- அரை டீஸ்பூன்
சர்க்கரை- கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

மக்காசோளத்தை நீளவாக்கில் இரண்டாக வெட்டிக்கொள்ளவும். ஒரு தட்டில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் . மிளகாய்த்தூள், சோயா சாஸ், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல நன்றாக குழப்பிக்கொள்ளவும்.

பேபிகார்னை இட்லி தட்டில் அரை வேக்காடாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு தட்டில் மைதா மாவு, சோள மாவு, ஒரு ஸ்டட்டிகை உப்பு கலந்து கொள்ளவும். மசாலா தடவிய பேபி கார்ன்களை உடைந்து விடாமல் ஒவ்வொன்றாக எடுத்து மைதா, சோளமாவு கலவையில் தேய்த்து சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான பேபி கார்ன் ப்ரை ரெடி.

Related Posts

Leave a Comment