446
			
				            
							                    
							        
    ஆஸ்கார் விருதுக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட படங்களில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரித்த கூழாங்கல் என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பிஎஸ் வினோத் ராஜ் என்பவர் இயக்கத்தில் உருவான இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. ஏற்கனவே இந்த படம் பல சர்வதேச விருதுகளை குவித்துள்ள நிலையில் தற்போது ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
