ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு தவறி கூட ‘இவற்றை’ சாப்பிடாதீங்க..

by Editor News

ஐஸ்கிரீம் என்றாலே நம் அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். ஐஸ்கிரீம் விரும்பாதவர்கள் யாருமே கிடையாது. அதிலும் குறிப்பாக அடிக்கும் வெயிலில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஐஸ்கிரீம் சாப்படுவதை விரும்புவார்கள். ஆனால், ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு. சில வகையான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அது என்ன மாதிரியான உணவுகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

சூடான பானம்: ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு டீ அல்லது காபி போன்ற சூடான பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது வயிற்று வலி மற்றும் வாந்தியை ஏற்படுத்தும்.

சிட்ரஸ் பழங்கள்: ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு புளிப்பு நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டாம். காரணம், சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலங்கள் உங்கள் வயிற்றில் உள்ள ஐஸ்கிரீமுடன் இணைந்து வாயு மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும்.

சாக்லேட்: ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு சாக்லேட் சாப்பிட வேண்டாம். காரணம், சாக்லேட்டில் உள்ள காஃபின் வயிற்றில் உள்ள ஐஸ்கிரீமுடன் கலந்து வயிற்று வலியை ஏற்படுத்தும்

மது: ஐஸ்கிரீம் சாப்பிட பிறகு ஆல்கஹால் குடித்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

வறுத்த உணவுகள்: ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு வறுத்த உணவுகளை சாப்பிட வேண்டாம். ஏனெனில், இது வயிற்றில் பாதகமான இரசாயன எதிர்வினைகளை ஏற்படுத்தும் மற்றும் ஆரோக்கியத்தை மோசமாக்கும்.\

Related Posts

Leave a Comment