மே.6 முதல் மே.12 வரை… 12 ராசிகளுக்கான இந்த வார ராசிபலன்!

by Lifestyle Editor

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் தங்களது உடைமைகளின் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். மற்றவர்களின் அறிவுரை கேட்டு யோசித்து செயல்படுவது நல்லது. உடல் நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். திருமண வாழ்வில் சில சிக்கல்கள் ஏற்படலாம். உங்கள் அதிர்ஷ்டமான எண் 13. அதிர்ஷ்டமான நிறம் பிரவுன்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் வெற்றி பெற புதிய வழிகளை கண்டுபிடிப்பீர்கள். உடல் நலனில் அதிக அக்கறை தேவை. வார்த்தைகளில் அதிகம் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கலாம். வாகனம் இயக்கும்போது கவனம் தேவை. குழந்தைகளினால் நற்செய்தி வந்து சேரும். அதிர்ஷ்டமான எண் 3. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மங்களகரமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் நலம் விரும்பிகளின் உதவியினால் புதிய உயரத்தை அடைவீர்கள். எதிரிகளினால் சிறிய தொல்லைகள் ஏற்படலாம். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு உதவியும் கிடைக்கும். அதிர்ஷ்டமான எண் 6. அதிர்ஷ்டமான நிறம் பிங்க்.

கடகம்:
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடல் ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்படலாம். உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமானது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளினால் சில தொல்லைகள் ஏற்படலாம். கவனமுடன் வேலை செய்ய வேண்டும். பண விஷயத்தில் அதிக கவனம் தேவை. உங்கள் பார்ட்னரின் ஆலோசனையை கேட்டு செயல்படுவதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்ப்பீர்கள். அதிர்ஷ்டமான எண் 14. அதிர்ஷ்டமான நிறம் ஊதா.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் மிகவும் பிசியாக இருப்பார்கள். தொலைதூர பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. சட்ட ரீதியான சிக்கல்கள் சரியாகும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவழிப்பீர்கள். புதிய வழிகளில் பணம் வரவு உண்டாகும். மங்களகரமான செலவுகள் ஏற்படும். அதிர்ஷ்டமான எண் 17. அதிர்ஷ்டமான நிறம் கிரீம்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இது ஒரு மங்களகரமான வாரமாக இருக்கும். அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் உண்டாகும். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும். வரன் தேடுபவர்களுக்கு திருமணம் கைகூடும். உங்கள் அதிர்ஷ்டமான எண் 12. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறிய அளவில் நஷ்டம் ஏற்படும். அதே சமயத்தில் புதிய வழிகளில் பண வரவு ஏற்படுவதால் நஷ்டத்தை ஈடு செய்து விடுவீர்கள். உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். எதிரிகளினால் சிறிய தொல்லைகள் ஏற்படும். சிறிய பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டமான எண் 2 அதிர்ஷ்டமான நிறம் கருப்பு.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சவால்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். உடல் நலனில் அதிக அக்கறை தேவை. நோய்வாய்ப்பட நேரிடலாம். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். குழந்தைகளினால் தொல்லை ஏற்படும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. வாழ்க்கை துணையின் அறிவுரையை கேட்டு செயல்படுவது நல்லது. அதிர்ஷ்டமான எண் 8. அதிர்ஷ்டமான நிறம் நீலம்.

தனுசு:
நீண்ட காலமாக கிடப்பில் இருந்த வேலைகளை இந்த வாரத்தில் செய்து முடிப்பீர்கள். நீங்கள் ஆசைப்பட்ட இடத்தை அடைவீர்கள். கடும் உழைப்பினால் வெற்றி உண்டாகும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. உடல் நலனில் அதிக அக்கறை தேவை. சிறிய காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வாழ்க்கை துணையால் நற்செய்தி வந்து சேரும். அதிர்ஷ்டமான எண் 15. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இது ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். சிறிய வேலைகளை கூட கஷ்டப்பட்டு செய்து முடிக்கும் சூழல் உண்டாகும். குடும்பத்தார் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களினால் நன்மை உண்டாகும். வார்த்தைகளில் கவனம் தேவை. காதல் வாழ்க்கை பொறுத்தவரை மங்களகரமான ஒரு காலமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிர்ஷ்டமான எண் 9. அதிர்ஷ்டமான நிறம் கருப்பு.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இது ஒரு வெற்றிகரமான காலகட்டமாக இருக்கும். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு வெற்றிகளை குவிப்பீர்கள். திட்டமிட்டு வேலைகளை செய்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி ஏற்படும். யாராலும் செய்ய முடியாத வேலைகளை செய்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். அரசாங்க ரீதியாக அனுகூலம் உண்டாகும். சிறிய பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. வரன் தேடுபவர்களுக்கு திருமணம் கைகூடும். அதிர்ஷ்டமான எண் 3. அதிர்ஷ்டமான நிறம் சாம்பல்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும். தொழில் செய்பவர்களுக்கும் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கும் நற்செய்தி வந்து சேரும். தொழில் செய்பவர்களுக்கு தொழில் விருத்தி ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பாரம்பரிய சொத்து விவகாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். புதிய வழிகளில் பண வரவு உண்டாகும். வாகனங்கள் வாங்க மிகவும் ஏற்ற ஒரு காலகட்டமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிர்ஷ்டமான எண் 11. அதிர்ஷ்டமான நிறம் மரூன்.

Related Posts

Leave a Comment