கறிவேப்பிலையின் நன்மைகள்…

by Lifestyle Editor

கறிவேப்பிலை செரிமான சக்தியை அதிகரித்து, அஜீரணம் போன்ற பிரச்சினை தடுக்கின்றது. இதற்கு இதிலுள்ள கார்பசோல் என்ற வேதிப்பொருள் காரணமாகும்.

நார்ச்சத்து அடங்கிய கறிவேப்பிலை மலச்சிக்கலை தடுப்பதுடன், இதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடி வளர்ச்சியினை அதிகரிக்கின்றது.

இளம்வயதில் முடி நரைத்தல், முடி உதிர்வு பிரச்சினைக்கு தீர்வாகவும், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் பயன்படுகின்றது.

பசியை கட்டுப்படுத்தும் கறிவேற்றிலை உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கின்றது.

கருவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. மேலும் சளி, இருமல் போன்ற தொற்றுகளில் இருந்து எதிர்த்து போராடுகின்றது.

கருவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயதான தோற்றத்தை தடுக்கவும், இதிலுள்ள வைட்டமின் சி சத்து தோல் பிரகாசத்தை அதிகரிக்கவும் செய்கின்றது.

பார்வை குறைபாட்டை போக்கவும், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கண்புரை நோயிலிருந்தும் பாதுகாக்கின்றது.

கருவேப்பிலையில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதிலுள்ள வைட்டமின் கே சத்து எலும்பு முறிவுகளை தடுக்கவும் செய்கின்றது.

பல் சொத்தை, ஈறுகளின் நோய், வாய் துர்நாற்றம் இவற்றினை போக்க கறிவேற்றிலை முக்கியமாக பயன்படுகின்றது.

கருவேப்பிலையில் உள்ள ஹார்மோன் சமநிலைப்படுத்தும் பண்புகள் மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகின்றன.

Related Posts

Leave a Comment