இன்றைய ராசி பலன்(21-02-24)

by Lifestyle Editor

மேஷம்:

இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் வேண்டும், இல்லையெனில் சச்சரவுகள் ஏற்படும். தம்பதியருக்குள் இருந்த விரிசல்கள் இன்று சரியாகும். உங்களது நீண்ட நாள் நண்பர்களை இன்று சந்திப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க இன்று ஆசிரியர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

ரிஷபம்:

காதல் உறவில் இருப்பவர்கள் தங்கள் விவகாரங்களுக்கு இடையில் மூன்றாம் நபரை கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தக்க சமயத்தில் உங்கள் நண்பர்கள் உதவுவார்கள். அரசு வேலைகளில் பணிபுரிபவர்கள் இன்று பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்ற சில இனிய தகவல்களை கேட்கலாம்.

மிதுனம்:

இன்றைய நாள் உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் சில புதிய விஷயங்களை தொடங்குவதில் மும்முரமாக இருப்பீர்கள். இதனால் பிற வேலைகளில் கவனம் செலுத்த மாட்டீர்கள். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சில வேலைகள் முடியும் என்பதால் உங்கள் மகிழ்ச்சிக்கு எல்லை இருக்காது. புதிய சொத்துக்களை வாங்க வேண்டும் என்ற உங்கள் ஆசை இன்று நிறைவேறும்.

கடகம்:

இன்று உங்கள் எதிரிகள் சிலர் உங்களை தொந்தரவு செய்ய முயற்சிப்பார்கள். எனவே இன்றைய நாளில் நீங்கள் மிகவும் நிதானம் மற்றும் பொறுமையுடன் இருக்க வேண்டும். இன்று திருமணம் சம்பந்தமாக எந்த முடிவும் எடுக்க நேரிட்டால், அதை செய்யாமல் மேலும் தள்ளிப் போடுவது நல்லது. வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்:

இன்று நீங்கள் பணிபுரியும் இடத்தில் பிஸியாக இருப்பீர்கள், இதன் காரணமாக இன்று உங்களின் சில புதிய திட்டங்களை தள்ளி போடலாம். உங்கள் மனதில் உள்ள அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள இன்று உங்களுக்கு நல்ல துணை கிடைப்பார். மன அமைதி இருக்கும். எனினும் உங்கள் அன்புக்குரியவரின் உடல்நிலை குறித்து சற்று கவலை ஏற்பட கூடும். முதலீட்டுத் திட்டங்களில் கவனம் தேவை. இல்லை என்றால் இழப்பு ஏற்படும்.

கன்னி:

இன்று தன்னம்பிக்கை குறையும், இதனால் சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். முடிந்த வரை இன்று நீங்கள் புதிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உறவுகளுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால், அதுவும் இன்று முடிவடையும். உங்கள் தந்தையின் உடல்நிலை குறித்து நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

துலாம்:

இன்று உங்கள் செயல் திறன் பற்றி சந்தேகம் மற்றும் குழப்பங்கள் ஏற்படலாம். இதன் காரணமாக சில நல்ல மற்றும் கெட்ட என கலவையான எண்ணங்கள் உங்கள் மனதில் எழும். யாரையும் பற்றி தவறான எண்ணங்களை நீங்கள் மனதில் கொண்டிருக்க வேண்டாம். உங்களது புகழ் மற்றும் மரியாதை அதிகரிக்கும். அரசியலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் வாகனங்களை கவனமாக ஓட்ட வேண்டும். இல்லையெனில் விபத்து அபாயம் உள்ளது. இன்று நீங்கள் பிறரை நம்பி ஏதேனும் பொறுப்பை ஒப்படைத்தால், அவர் அதை வெற்றிகரமாக முடிப்பார். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று நீங்கள் யாரிடமாவது கடன் வாங்க நினைத்தால் அதை செய்யாதீர்கள். இன்று நீங்கள் வாங்கும் கடனை திரும்ப கொடுப்பது கடினம். வணிகர்கள் இன்று ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கவும், இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

தனுசு:

இன்றைய நாள் உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். இதில் சில தேவையற்ற செலவுகளும் இருக்க கூடும். குடும்ப உறுப்பினர்களுக்காக இன்று நீங்கள் நேரத்தை செலவிட வேண்டும். உங்கள் தாயின் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் அனுபவமுள்ள ஒருவரை மட்டும் கலந்தாலோசிப்பது நல்லது.

மகரம்:

இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும் என்கிறார். இன்று அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். எதிர்காலத்திற்காக இன்று நீங்கள் சிறிது பணத்தை சேமிக்க நினைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்கள் ஆதரவாக இருப்பீர்கள். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இன்று நல்ல நாள். மாலை நேரம் உறவினர்கள் வீட்டில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம்:

இன்று வேலை செய்யும் இடங்களில் மேலதிகாரிகளுடன் நல்லுறவை பேண வேண்டும் மற்றும் மோதல்களை தவிர்க்க நிதானமாக இருக்க வேண்டும். குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூரில் வேலை செய்பவர்களுக்கு இன்று தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நினைவுகள் அதிகமாக இருக்கும். உங்களின் பொறுமையை சோதிக்க கூடிய நிகழ்வுகள் நடக்கலாம். ஆனால் நீங்கள் இறுதி வரை பொறுமையாக இருந்தால் மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும்.

மீனம்:

உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான சில புதிய திட்டங்களை நீங்கள் இன்று முன்னெடுப்பீர்கள். இதற்காக உங்கள் குடும்ப உறுப்பினரையும் கலந்தாலோசிக்கலாம். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள இன்று வாய்ப்புகள் அமையும். உங்களுக்கு இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நாள் முடிவதற்குள் செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்க கூடும். பல நாட்களாக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியம் இன்று மேம்படும்.

Related Posts

Leave a Comment