இன்றைய ராசி பலன்(25.01.24)

by Lifestyle Editor

மேஷம்:

உங்கள் வாழ்க்கை துணையிடமிருந்து தேவையான வழிகாட்டுதலை பெறுவீர்கள். உங்களுக்குள் தொடர்பு இன்னும் பலமாகும். உங்களுக்குள் இருக்கும் அச்சங்களையும் சந்தேகங்களையும் பெரிதாக யோசிக்காதீர்கள். நீங்கள் இன்று வெளிப்படுத்தும் கடின உழைப்பு பலனளிக்கும். உங்கள் வாழ்விற்கு தேவையான அங்கீகாரம் கிடைக்கும் இது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அலுவலகத்தில் சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள்.

ரிஷபம்:

தங்கள் வாழ்வில் காதல் துணையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இன்றைய நாள் சாதகமாக இருக்கும். ஏற்கனவே உறவில் இருப்பவர்கள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதன் ஒற்றுமையை பேணலாம். பணியிடத்தில் இன்று நீங்கள் உத்வேகமுடன் செயல்படுவது வெற்றி பெற உதவும்.

மிதுனம்:

உறவுகளுக்குள் பெரிய எதிர்பார்ப்புகளை தவிர்க்க வேண்டும். நீங்கள் காட்டும் நிபந்தனையற்ற அன்பு மற்றும் பாசம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். உங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகள் மற்றும் தோன்றும் புதிய யோசனைகள் சிறப்பான பலன்களை தரும். உங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முக்கியத்துவம் கொடுப்பது உங்களை புத்துணர்ச்சியாக வைக்கும்.

கடகம்:

இன்று உங்கள் உறவில் திறந்த மனதுடன் நேர்மையை கடைபிடிக்க வேண்டும். இது உறவுகளுக்குள் ஆழமான தொடர்பு மற்றும் புரிதலை வளர்க்கிறது. இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உரிய பாராட்டு அல்லது பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு சாதகமான பலன்களை பெற வேண்டுமென்றால் பொறுமையையும் விடாமுயற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும்.

சிம்மம்:

உறவில் ஆரோக்கியமான சமநிலையை பேணுவதன் மூலம் உங்கள் தனித்துவத்தை வளர்த்து கொள்ள முயற்சிக்கவும். குடும்ப விவகாரங்களில் இன்று நீங்கள் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையை கடைபிடிக்க வேண்டும். இன்று உங்கள் பணியிடங்களில் ஈகோவை விட்டுவிட்டு சக ஊழியர்களுடன் ஒற்றுமையாக இருங்கள். உங்களது பெரிய கனவுகளை நனவாக்க முற்றிலும் மாறுபட்டு சிந்தித்து செயல்படுங்கள்.

கன்னி:

உங்கள் வாழ்க்கை துணையிடம் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தி உறவை வலுப்படுத்துங்கள். உறவுகளுக்குள் புதிய அனுபவங்களையும், நினைவுகளையும் உருவாக்க முயற்சி செய்யுங்கள். இன்று நீங்கள் வாழ்க்கையில் சில ரிஸ்க்குகளை எடுங்கள். இது உங்கள் வளர்ச்சிக்கு உதவும். எதிலும் விவேகமாக செயல்படுங்கள்.

துலாம்:

இன்று உங்கள் உறவில் ஏதேனும் எதிர்பார்ப்புகள் இருந்தால் அதனை குறைத்து கொள்ளுங்கள். எதிர்பார்பற்ற அன்பை உங்கள் பார்ட்னரிடம் வெளிப்படுத்துங்கள். நேர்மையாக இருக்க உங்களை நீங்களே ஊக்குவித்து கொள்ளுங்கள், இது உங்கள் துணையுடனான தொடர்பை ஆழமாக்குகிறது. பணியிடத்தில் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் திறன்களை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

உங்கள் உறவில் தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கவும், ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்கவும். உங்கள் அன்புக்குரியவருடனான தொடர்பை ஆழமாக்க முயற்சிக்கவும். இன்று உங்கள் வாழ்க்கையை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். உங்களின் தனித்துவமான யோசனைகளில் நம்பிக்கை வைத்து தைரியமாக செயல்படுங்கள்.

தனுசு:

உங்கள் உறவில் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் தன்னம்பிகை அதிகரிக்கும். இது உறவுக்குள் பாதுகாப்பு உணர்வை வளர்க்கிறது. வேலை செய்யும் இடத்தில் உங்கள் ஈகோவை கைவிட்டு சக ஊழியர்களின் உணர்ச்சிகள் மற்றும் போராட்டங்களை புரிந்து கொள்ளவும் வேண்டும். உங்கள் முயற்சியின் மூலம் சாதனைகள் மற்றும் முன்னேற்றம் கிடைக்க கூடும். எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் பலமுறை சிந்தியுங்கள்.

மகரம்:

உங்கள் உறவில் இன்று கவனமாகவும் இருங்கள், உங்கள் துணையைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்த்து கொள்ளுங்கள். இன்று உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை காணும் நாளாக இருக்கும். உங்கள் நீண்ட நாள் முயற்சிகள் இறுதியாக இன்று வெற்றியாக மலரும். அலுவலகத்தில் சச்சரவுகளில் இருந்து விலகி உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையாக் இருக்க பயிற்சி செய்யுங்கள்.

கும்பம்:

உங்கள் உறவில் அமைதி மற்றும் பொறுமையை கடைபிடிக்கவும். வாழ்க்கை துணையிடம் ஆழமான தொடர்பை உருவாக்க இன்று நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் இன்று முயற்சிக்கும் புதுமையான விஷயங்கள் உங்களுக்கு புகழை தேடி தரும். உங்கள் தனிப்பட்ட யோசனைகள் நல்ல பலன்களை தரும். உங்கள் பணியிடத்தில் நல்லிணக்கம் மற்றும் பொறுமையை கடைபிடிக்கவும். புதிய வணிக முயற்சியில் வலுவான சாதனைகளை படைப்பீர்கள்.

மீனம்:

இன்று உங்கள் உறவில் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டம் இருக்கும். இருவருக்குள்ளும் அன்பு மற்றும் பாசம் அதிகரிக்கும். உங்கள் சொந்த திறன்கள் மீது நம்பிக்கை வைத்து இன்று செயல்படுங்கள் நம்புங்கள். பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பண விவகாரங்களை கையாளுவதில் எச்சரிக்கை அவசியம்.

Related Posts

Leave a Comment