இன்றைய ராசி பலன்(23`-12-23)

by Lifestyle Editor

மேஷம்

உங்கள் அன்புக்குரியவர்களிடம் உங்கள் ஆசைகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்த இன்று ஒரு நல்ல நாள். அவர்களிடம் நீங்கள் இன்று வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருங்கள்.

ரிஷபம்

உங்கள் காதல் வாழ்க்கை இன்று சிறப்பாக மாறலாம், எதிர்பாராத விஷயங்கள் நடக்கலாம். தாமாகவே வரும் புதிய வாய்ப்புகளை ஏற்று கொள்ளுங்கள். உங்கள் உறவில் தொடர்பு முக்கியமானது. வாக்குவாதம் ஏற்பட்டால் நீங்கள் விட்டுக்கொடுத்து இருங்கள்.

மிதுனம்

உங்கள் வாழ்க்கை துணையுடன் இணைந்து புதிதாக ஏதாவது முயற்சி செய்ய இன்று நல்ல நாள். இன்று நீங்கள் பிறரின் பாராட்டுகளையும், நேர்மறை கருத்துக்களையும் பெறுவீர்கள். புதிய விஷ்யங்களை கற்று கொள்ள சில எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கலாம், அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கடகம்

உங்கள் காதல் வாழ்க்கையில் இன்று சில எதிர்பாராத சவால்களை சந்திக்க நேரிடும், ஆனால் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். நிலைமை விரைவில் சரியாகும். நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்த இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கலாம். இன்று உங்கள் உணர்ச்சி ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்

உங்கள் காதல் வாழ்க்கை இன்று சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். குழுப்பணியில் ஈடுபட மற்றும் புதிய திட்டங்களை முன்னெடுக்க இன்று உங்களுக்கு நல்ல நாள். உங்களின் நீண்ட நாள் அல்லது தொடர் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

கருத்து வேறுபாடு உள்ள நபர்களுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய உங்களுக்கு அழைப்பு வரலாம். உங்களது உறவு இன்று இனிமையான அனுபவங்களை உங்களுக்கு பரிசாக தரலாம். நீங்கள் முன்பு செய்த பழைய முதலீடுகளிலிருந்து இன்று நீங்கள் பலன்களைப் பெறலாம்.

துலாம்

உங்கள் உறவில் கடந்தகாலத்தில் நிகழ்ந்த தவறுகளை சரி செய்ய கவனம் செலுத்த இன்று ஒரு நல்ல நாள். உங்களது அன்புக்குரியவர்களிடம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பேசுங்கள். இன்று நீங்கள் சில சவால்களை சந்திக்க நேரிடலாம், ஆனால் மனம் தளராதீர்கள். இன்று உங்களது பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்

உங்கள் காதல் வாழ்க்கையில் இன்று சில சவால்களை சந்திக்க நேரிடலாம், ஆனால் உங்கள் துணை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.தவறான புரிதல்களை தவிர்க்க வேண்டும். இன்று நீங்கள் சில கடினமான முடிவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எது நடந்தாலும் மனம் தளராமல் உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள் மற்றும் நம்பிக்கையுடன் இருங்கள்.

தனுசு

உங்கள் மனைவி அல்லது காதலருடன் ஆழமான தொடர்பை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இன்று நீங்கள் சற்று நெகிழ்வாக இருக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் மாற்றத்திற்கு தயாராக இருங்கள்.

மகரம்

உங்கள் காதல் வாழ்க்கையில் இன்று சில சோதனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் ஒருவரையொருவர் நம்புவது இன்று முக்கியம். உங்கள் இலக்குகளை அடைய இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று தேவையில்லாத ரிஸ்க் எடுக்காதீர்கள்.

கும்பம்

இழந்த நட்பு அல்லது காதாக உறவில் இன்று மீண்டும் நம்பிக்கை மற்றும் தொடர்பை வளர்ப்பதில் கவனம் செலுத்த நல்ல நாள். உங்கள் திறமைகளை சுயபரிசோதனை செய்து பார்க்கும் சில சுவாரஸ்யமான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கலாம்.

மீனம்

உறவுகளுக்குள் இன்று அமைதி மற்றும் மகிழ்ச்சி காணப்படும். இன்று உங்கள் துணையுடன் வேடிக்கையாக நேரத்தை செலவிடுவதில் கவனம் செலுத்துங்கள். உங்களது அர்ப்பணிப்பு உணர்வு இன்று உங்களை புதிய உயரத்திற்கு இட்டு செல்லும்.

Related Posts

Leave a Comment