இன்றைய ராசி பலன்(14-12-23)

by Lifestyle Editor

மேஷம்

எதிர்பாராத தொடர்பு உங்கள் காதல் வாழ்க்கையில் அன்பின் ஒளியை பற்ற வைக்கும். பணியிடத்தில் பல்வேறு வேலைகள் காரணமாக குழப்பம் ஏற்பட்டாலும் ஒருங்கிணைந்த கவனம் செலுத்தினால் விரைவில் வெற்றி பெறலாம்.

ரிஷபம்

உங்கள் காதல் வாழ்க்கையில் அன்பு ஆழமாக வேரூன்ற இருக்கிறது. பணியிடத்தில் பொறுமையின் மூலமாக சவால்களை வெல்லலாம். உங்கள் இலக்குகளை அடைவீர்கள். சீரான உணவுப் பழக்கம் மூலம் உடல்நலனை தக்கவைத்துக் கொள்ளவும்.

மிதுனம்

திறந்த மனதுடன் செயல்படவும். எதிர்பாராத சிக்கல்களை சந்திக்க நேரிடும். உங்கள் பணி வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மன அமைதி மற்றும் தெளிவு பெற நல்ல புத்தகங்களை வாசிக்கலாம். புதிய நகரங்களுக்கு பயணம் செய்வீர்கள்.

கடகம்

உங்கள் காதல் வாழ்க்கையில் நல்லிணக்கம் நிறைந்திருக்கும். ஏற்கனவே உள்ள உறவுகள் இன்று மேலும் பலமடையும். பணியிடத்தில் உங்கள் திறன்களின் மீது நம்பிக்கை வைக்கவும். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். சமையல் பணிகள் குதூகலத்தை தரும்.

சிம்மம்

நீங்கள் காதல் வானில் சிறகடித்து பறக்க இருக்கிறீர்கள். பணியிடத்தில் உங்கள் தலைமைத்துவ பண்புகளை வெளிப்படுத்துவீர்கள். உங்களுக்கான அங்கீகாரம் அல்லது பதவிஉயர்வு போன்றவை தேடி வரும். மனம் ரிலாக்ஸ் அடைய உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

கன்னி

ஏற்கனவே காதலில் இருப்பவர்களின் பந்தம் பலம் அடையும். மற்றவர்களுக்கு புதிய காதல் தொடர்புகள் ஏற்படும். சீரான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலமாக உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்தவும்.

துலாம்

பணியிடத்தில் கூட்டு நடவடிக்கைகள் உங்களுக்கு வெற்றியை தேடிக் கொடுக்கும். மனநலனை மேம்படுத்திக் கொள்வதில் அக்கறை செலுத்தவும். அழகான நகரங்களுக்கு சுற்றுலா செல்லலாம் அல்லது சமூக நிகழ்வுகளில் பங்கேற்கலாம்.

விருச்சிகம்

உங்கள் காதல் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை தரும் அனுபவங்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் மன உறுதி வெற்றியை தேடித் தரும். புத்தகங்களை வாசிப்பது மனதுக்கு அமைதியைத் தரும்.

தனுசு

புதிய காதல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உடல் நலனை தக்க வைக்க ஆரோக்கியமான வாழ்வியல் நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். மனதுக்கு ஆச்சரியம் ஏற்படுத்துகின்ற இடங்களுக்கு சுற்றுலா செல்வீர்கள்.

மகரம்

உங்கள் உறவுகளை தக்க வைப்பதற்கான அடித்தளத்தை பலமானதாக அமைத்துக் கொள்ளவும். பணியிடத்தில் கடின உழைப்பின் மூலமாக இலக்குகளை அடைவீர்கள். தோட்டப் பணிகளை கவனித்தால் மனம் அமைதி அடையும்.

கும்பம்

பணியிடத்தில் உங்கள் புத்தாக்க சிந்தனை மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றுக்கு வெற்றி கிடைக்கும். தொலைதூர பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். அறிவார்ந்த கருத்தரங்கு கூட்டங்களில் பங்கேற்பீர்கள்.

மீனம்

பணியிடத்தில் உங்கள் ஆழ்மனம் சொல்வதைக் கேட்டு நடந்தால் வெற்றி நிச்சயம். அதே சமயம், வேலைப்பளுவுக்கு இடையே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். பெயிண்டிங் செய்வது அல்லது இசையை ரசிப்பது மன அமைதியை தரும்.

Related Posts

Leave a Comment