அதிகப்படியான உப்பு சாப்பிட்டால் வயிற்று புற்றுநோய் வருமா..?

by Lifestyle Editor

ஒவ்வொரு முறை மருத்துவரிடம் செல்லும் போதும், சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்; இல்லையென்றால் ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு இதயம் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும் என நமக்கு அறிவுரை வழங்குவார். அதுமட்டுமல்லாமல் உப்பை குறைக்காவிட்டால் புற்றுநோய் வரும் ஆபத்தும் உள்ளதாக எச்சரிக்கின்றனர்.

தினமும் 10 கிராமுக்கு அதிகமாக உப்பை சாப்பிட்டால் வயிற்றில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வொன்று கூறுகிறது. நீங்கள் தினமும் எவ்வுளவு அதிகமாக உப்பை எடுத்துக்கொள்கிறீர்களோ அந்தளவிற்கு ஆபத்தும் அதிகமாகும். இந்த ஆய்வு முதலில் எலியை வைத்து நடத்தப்பட்டது. அப்போது அதிகப்படியான உப்பு எலியின் வயிற்றில் புற்றுநோய் செல்களை உருவாக்குவது தெரிய வந்தது.

Related Posts

Leave a Comment