“இரவு உணவை தவிர்ப்பவரா நீங்க? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க ..

by Lifestyle Editor

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். உடலின் வளர்ச்சிக்கும், ஊட்டச்சத்துக்கும் முக்கியமானது நாம் உண்ணும் உணவு தான்.

ஆனால் சிலர் நாள்முழுக்க வேலை செய்த களைப்பின் காரணமாக இரவு உணவை உண்ணாமல் உறங்கி விடுவர். மேலும் இரவில் உணவு உண்ணாமல் இருந்தால் உடல் எடை குறையும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. இரவு உணவைத் தவிர்ப்பது மனப் பதட்டத்தை ஏற்படுத்தும்.

மேலும் இது இரவு தூக்கமின்மையை ஏற்படுத்துவதோடு, இரவில் ஏதேனும் குப்பை உணவுகளை உண்ணத் தூண்டுகிறது. இதனால் மன மற்றும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு காலை உணவையும் தவிர்க்க வழிவகுக்கிறது. உடல் எடைக்குறைப்பு என்பது உணவைத் தவிர்ப்பது என்று பலரும் நம்புகின்றனர்.

ஆனால் உண்மையில், சரிவிகித, ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பதே ஆரோக்கியமான உடல் எடைக்குறைப்புக்கு வழிவகுக்கும். நாள் முழுக்க வேலை செய்ய நம் உடலுக்கு போதுமான அளவு ஆற்றல் கிடைக்க வேண்டும். அதற்கு இரவில் சரியான உணவு மற்றும் தூக்கம் இரண்டும் அவசியம்.

Related Posts

Leave a Comment