இன்றைய ராசிபலன்(29-11-2023)..

by Lifestyle Editor

மேஷம்:

உங்களின் பேச்சாற்றலால் இன்று நினைத்த காரியத்தை சாதிப்பீர்கள். சொந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று பெயரும், புகழும் கிடைக்கும். விளையாட்டு உலகத்துடன் தொடர்புடையவர்களுக்கு இன்று சிறந்த நாள். பயணங்களால் உங்களுக்கு லாபம் கூடும். இன்று நீங்கள் பழைய நண்பர்களைச் சந்தித்து உற்சாகமாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 11

ரிஷபம்:

இன்று உங்களது பேச்சை கட்டுப்படுத்தாவிட்டால் முக்கிய வேலை கெட்டு போகலாம். உங்களின் வழக்கமான சிந்தனை மற்றவர்களின் எண்ணங்களை மாற்ற கூடிய வலிமை படைத்ததாக இன்று இருக்கும். உங்களது கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். உங்களுக்கு விருப்பமான கடவுளை வணங்குவது மனநிம்மதி தரும். முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். முக்கிய விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பர்பிள்

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம்:

இன்று உங்களது பொருளாதார நிலை மேம்படும். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று செய்யும் முதலீட்டில் லாபம் அதிகரிக்கும். அரசாங்க வேலையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். இன்று பணம் கொடுக்கல் வாங்கல்களில் அவசரம் காட்ட வேண்டாம். நண்பர்களின் ஆதரவு இன்று உங்களுக்கு இருக்கும். இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:7

கடகம்:

வியாபாரிகளின் தொழில் விரிவாக்கத் திட்டங்கள் இன்று வெற்றி பெறும். மகிழ்ச்சியாக இருங்கள். தேவையற்ற கவலைகளை விடுங்கள்.உணவுப் பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று மிகவும் நல்ல நாள். கடனாக கொடுத்த பணத்தை இன்று திரும்ப பெறலாம். சரியான விஷயங்களில் இன்று உங்கள் மூலதனத்தை முதலீடு செய்யுங்கள். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அந்தஸ்து உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்:5

சிம்மம்:

வாழ்க்கையில் வளர்ச்சிக்கான ஒரு புதிய முயற்சியை எடுக்க வேண்டிய நாள் இன்று. எனவே இன்று உங்கள் வழியில் வரும் புதிய வாய்ப்புகளை தவிர்க்காமல் பயன்படுத்தி கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிப்பீர்கள். இன்று எதிர்பாராத செலவுகள் வரலாம். சிரமப்படுபவர்களுக்கு உதவும் எண்ணம் இன்று உங்களுக்குள் எழும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி:

இன்று உங்களது பொருளாதார நிலை உயரும். தொழில் செய்வோர் வியாபார வளர்ச்சி சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். நம்பிக்கையின்மையால் நீங்கள் இன்று சில தவறான முடிவுகளை எடுக்க நேரிடலாம். ஆன்மீகத்தில் இன்று நாட்டம் அதிகரிக்கும், இதன் மூலம் மனஅமைதி அடைவீர்கள். உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கோல்ட்

அதிர்ஷ்ட எண்: 3

துலாம்:

நீண்ட நாட்களாக நிலவி வந்த குடும்ப தகராறுகள் இன்றோடு முடியும். முக்கியமான பணிகளை முடிப்பதில் இன்று மும்முரமாக இருப்பீர்கள். அனைவரிடமும் அன்பாக பழகுங்கள், நீங்கள் அகங்காரத்துடன் இருப்பீர்கள் என்றால் அதனால் இன்று உங்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவசர அவசரமாக எடுக்கும் முடிவுகள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். ரிஸ்க்கான செயல்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்

அதிர்ஷ்ட எண்: 10

விருச்சிகம்:

இன்று வேலை தொடர்பாக நீங்கள் அலைய வேண்டியிருக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவை பெறுவீர்கள். இதுநாள் வரை நீடித்து வந்த தடைகள் நீங்கி அனுகூலமான சூழ்நிலை உருவாகும். வியாபாரம் நன்றாக நடக்கும். ஊழியர்களுக்கு பணி இடத்தில் நிம்மதி இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சில்வர்

அதிர்ஷ்ட எண்: 8

தனுசு:

இன்று முடிவுகளை எடுக்கும் போது உங்களுக்கு நிதானம் தேவை, அவசரப்பட்டு எதையும் செய்யாதீர்கள். மாலை நேரத்தில் நண்பர்களின் சந்திப்பு உங்களை உற்சாகப்படுத்தும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாப வாய்ப்புகள் வரும். ஊழியர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்களுக்கு இன்று கிடைக்கும் புதிய அனுபவங்கள் உங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

மகரம்:

இன்று நீங்கள் மற்றவர்களைப் பற்றி தவறாக நினைக்காதீர்கள். உணவில் கட்டுப்பாடு இல்லை என்றால் வயிறு சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். உங்கள் வேலையில் இன்று அதிக கவனம் செலுத்துங்கள். வாழ்க்கை துணையால் இன்று உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். சிறந்த அறிவாற்றல் உள்ள ஒருவரிடமிருந்து நீங்கள் உரிய வழிகாட்டுதலை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம்:

எதை செய்ய வேண்டுமோ அதை இன்றே செய்து முடிக்க வேண்டும், நாளை என்று தள்ளி வைத்தால் நஷ்டம் ஏற்படும். இன்று தேவையில்லாமல் நேரத்தை வீணாக்காதீர்கள். முக்கிய விஷயங்களில் நிதானமாக யோசித்து முடிவு எடுங்கள். முன்பு செய்த பழைய முதலீடுகளால் இன்று லாபம் கிடைக்கும். தடைகளை முறியடிப்பீர்கள் என்றாலும் பிறருடன் வாக்குவாதம் வேண்டாம். ஊழியர்களுக்கு வேலை செய்யும் இடத்தில கூடுதல் பணிச்சுமை இருக்கும். கொடுக்கல் வாங்கல்களில் அவசரம் வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

மீனம்:

இன்று நீங்கள் திட்டமிட்டிருந்த முக்கியமான பணிகளை முடிக்க முடியாமல் போகலாம்.பிறருக்கு உதவி செய்வது மன அமைதியைத் தரும். இன்று உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலாம் அல்லது எதிர்பாராத வாய்ப்பு வழங்கப்படலாம். இன்று நீங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று ரிஸ்க் எடுக்கத் துணிவீர்கள். அதற்கேற்ற பலனையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிங்க்

அதிர்ஷ்ட எண்:14

Related Posts

Leave a Comment