நான் படங்களில் இருந்து காப்பி அடிப்பதில்லை – அட்லி

by Lifestyle Editor

அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படம் இப்போது வரை சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. ஆனாலும் இந்த படத்தில் பல தமிழ்ப் படங்களில் காட்சிகள் உருவப்பட்டு பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டு ஜவான் படத்தில் சொருகப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அட்லி இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் இதுபோன்ற விமர்சனங்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது அட்லி அளித்துள்ள பேட்டியில் “நான் எந்த படத்தில் இருந்தும் காப்பி அடிப்பதில்லை. என் படத்தில் மற்ற படங்களின் தாக்கம் இருப்பதை தவிர்க்க முடியாது. இது மற்ற இயக்குனர்களுக்கும் நடந்துள்ளது. ஆனால் எனக்கும் மட்டும் தொடர்ந்து இதுபோன்ற விமர்சனங்கள் வருகின்றன” எனக் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment