வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி ..!

by Lifestyle Editor

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான கிருஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை கல்லறை தினமாக கிருஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி கல்லறைத் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்ய அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி இன்று காலை நடைபெற்றது.

புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்கள் மற்றும் தங்களுடைய உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அதனை தொடர்ந்து இஸ்ரேல் பாலஸ்தீன போரில் உயிர் நீத்தவர்களுக்கும் ஆன்மா சாந்தியடைய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதைபோல் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடந்த 2004 ம் ஆண்டு சுனாமி பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லறைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.

வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த கல்லறை திருநாளில் வெளிநாடு, வெளி மாவட்டங்கள், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் பங்கேற்றனர்.

Related Posts

Leave a Comment