லியோ திரைப்பட வெற்றிவிழா.. ரசிகர்கள் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும்

by Lifestyle Editor

லியோ வெற்றி விழா நாளை மாலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு வரும் ரசிகர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

சமீபத்தில் இதே நேரு விளையாட்டு அரங்கில் நடந்த கார்த்தியின் ஜப்பான் படத்தின் விழாவின்போது காவல்துறையினர் மேற்கண்ட விதிமுறை நிபந்தனைகளை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் ரசிகர்கள் காவல்துறையின் இந்த நிபந்தனைகளால் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

லியோ திரைப்பட வெற்றிவிழா நிகழ்ச்சியில் பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்றும், பாஸ் உடன் ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறை அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment