20 அடி பள்ள ஆழத்தில் விழுந்த நபர் – போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்!

by Lifestyle Editor

மதுபோதையில் 20 அடி பள்ள ஆழத்தில் விழுந்த நபரை, போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் பல மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

20 அடி பள்ள ஆழத்தில் விழுந்த நபர்

சேலம், ஏற்பாடு மலைச்சாலையில் நன்றாக குடித்து மதுபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது மது போதையில் வண்டி ஓட்டிக்கொண்டு வரும் போது நிலைத்தடுமாறி 20 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தார். செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் அவர் விழுந்தநிலையில், மேலே வர முடியாமல் காலை வரை தவித்துள்ளார்.

இந்நிலையில், அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் இவரின் சத்தம் கேட்டு பள்ளத்தை எட்டிப் பார்த்தனர். அப்போது, இவர் 20 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிக்கொண்டதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே, இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் விரைந்து வந்து அவரை கயிறு மூலம் காப்பாற்றினர். இதனையடுத்து மீட்கப்பட்ட அந்த நபரை மருத்துவ சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர்.

Related Posts

Leave a Comment