மனோபாலா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் …

by Lifestyle Editor

நடிகர் மனோபாலா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் உதவி இயக்குனராக அறிமுகமானவர் மனோபாலா சிறிய கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருந்தார். இதையடுத்து நிறம் மாறாத பூக்கள் கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த இவர் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். அத்துடன் நடிகர் வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோருடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன் ,சத்யராஜ், கார்த்திக்கு உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களை வைத்து திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு அங்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து உடல்நலம் குன்றிய மனோபாலா இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment