புனித வெள்ளி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் ..

by Lifestyle Editor

கிறிஸ்தவ சமூகத்தில் புனித வெள்ளிக்கு முக்கிய இடம் உண்டு. இது ஈஸ்டர் ஞாயிறுக்கு முன் புனித வியாழனுக்கு பிறகு கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இதுபற்றி பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள் பற்றி இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்.

எல்லா கிறிஸ்தவ பண்டிகைகளையும் போல, புனித வெள்ளி ஒவ்வொரு ஆண்டும் ஒரே நாளில் வருவதில்லை. இந்த கொண்டாட்டத்தின் தேதி மாறிக்கொண்டே இருக்கிறது. வசந்த உத்தராயணத்தின் முதல் முழு நிலவுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை அன்று புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சந்திர நாட்காட்டியின் படி கொண்டாடப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில், புனித வெள்ளி ஏப்ரல் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இந்த நாளை மகிழ்ச்சியான நாள் என்று நினைப்பார்கள். ஏனென்றால் அதில் புனிதம் என்ற வார்த்தை உள்ளது. ஆனால் இது ஒரு துக்க நாள். அதனால் புனித வெள்ளியில் கத்தோலிக்கர்கள் இறைச்சி சாப்பிடுவதில்லை. விரதம் இருப்பார்கள்.

தங்கள் பாவங்களை நீக்குவதற்காக ஏசு கிறிஸ்து தன்னை சிலுவையில் அறைந்துகொண்டு உயிர்நீத்ததாக கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் கருதுகிறார்கள். ஏசு உயிர் நீத்ததாகக் கூறப்படும் இந்த வெள்ளி புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. தாங்கள் செய்த பாவங்களுக்காக சிலுவையை சுமந்த ஏசு பட்ட பாடுகளை காண சகிக்க முடியாததால் இனி பாவங்களே செய்யப்போவதில்லை என இந்த புனித வெள்ளியில் உறுதியேற்றுக்கொண்டதாக சில கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் கூறுகிறார்கள்.

வழக்கமான வழிபாட்டு நாளில் தேவாலயங்தளில் உண்பதற்காக வழங்கப்படும் ஏசுவின் உடலாலும் இரத்தத்தாலும் ஆனதாகக் கருதப்படும் திவ்ய நற்கருணை அவர் இறந்ததை அனுசரிக்கும் விதமாக இன்றிலிருந்து துணியால் மூடிவைக்கப்படுகிறது. ஏசு மீண்டும் உயிர் நீத்ததாகக் கருதப்படும் நாளில் இருந்து மூன்றாவது நாள் இரவு திவ்ய நற்கருணை மீதுள்ள துணி விலக்கப்பட்டு ஈஸ்டர் தினம் கொண்டாடப்படுகிறது.

இயேசு உயிர்‌ நீத்த தினத்தை புனித வெள்ளியாகவும்‌. மீண்டும்‌ உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர்‌ சன்டேவாகவும்‌ கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்‌.

Related Posts

Leave a Comment