சமூக வலைத்தளத்தில் இணைந்த அஜித்தின் மனைவி ஷாலினி ..

by Lifestyle Editor

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிகையை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் .

இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். நேற்று கூட அஜித் தனது மனைவியுடன் கட்டிப்பிடித்து எடுத்துக்கொண்ட அழகிய ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளிவந்தது.

இன்ஸ்டாகிராமில் ஷாலினி :

இந்நிலையில், நடிகை ஷாலினி முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கை துவங்கியுள்ளார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராமில் முதல் பதிவாக தனது காதல் கணவர் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை தான் அவர் வெளியிட்டுள்ளார் .

ஷாலினி சமூக வலைத்தளத்தை பயன்படுத்த துவங்கியுள்ளார் என்பதை அவருடைய தங்கை ஷாமிலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அறிவித்துள்ளார் .

Related Posts

Leave a Comment