TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை https://www.tamilliveinfo.com The Best and First Tamil News Channel Tue, 07 Apr 2020 16:36:47 +0000 en-GB hourly 1 https://wordpress.org/?v=5.4 161564570 கொரோனா தடுப்பு பணிகள்; நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி! https://www.tamilliveinfo.com/archives/53645 https://www.tamilliveinfo.com/archives/53645#respond Tue, 07 Apr 2020 16:36:47 +0000 https://www.tamilliveinfo.com/?p=53645 கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் தருமாறு பொதுமக்களுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இந்த…

The post கொரோனா தடுப்பு பணிகள்; நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் தருமாறு பொதுமக்களுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள, முதல் அமைச்சர் நிவாரண நிதி, பிரதமர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு (பெப்சி அமைப்பு) ரூ.25 லட்சம் என ரூ.1.25 கோடியை நடிகர் அஜித்குமார் நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

இதற்கு முன்பு, நடிகர் ரஜினிகாந்த் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவி தொகையாக ரூ.50 லட்சம் வழங்கி உள்ளார்.  நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி உள்ளனர். சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து ஏற்கனவே பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் உதவி வழங்கி இருக்கிறார்கள்.

நடிகர் பார்த்திபன் 250 மூடை அரிசி வழங்கி உள்ளார். ஒவ்வொரு மூடையும் 25 கிலோ எடை கொண்டதாகும். நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலா 10 மூடை அரிசி வழங்கி உள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் 150 மூடை அரிசி வழங்கி உள்ளார். திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

The post கொரோனா தடுப்பு பணிகள்; நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
https://www.tamilliveinfo.com/archives/53645/feed 0 53645
விஜய் சேதுபதிக்காக கதையுடன் காத்திருக்கும் சேரன்! https://www.tamilliveinfo.com/archives/53642 https://www.tamilliveinfo.com/archives/53642#respond Tue, 07 Apr 2020 16:32:29 +0000 https://www.tamilliveinfo.com/?p=53642 விஜய் சேதுபதிக்காக கதையை தயார் செய்து வைத்துள்ள சேரன், அது செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி…

The post விஜய் சேதுபதிக்காக கதையுடன் காத்திருக்கும் சேரன்! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
விஜய் சேதுபதிக்காக கதையை தயார் செய்து வைத்துள்ள சேரன், அது செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் சேரன்.

கடைசியாக திருமணம் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு பிறகு புதிய படத்தை இயக்குவதற்கான கதையை தயார் செய்துள்ளார். இந்த கதையை முன்னணி நடிகர்களிடம் சொல்ல நேரம் கேட்டும் அவர்கள் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சேரன் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி முன்வந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் இதன் படப்பிடிப்பை இன்னும் தொடங்கவில்லை. தற்போது தவமாய் தவமிருந்து படத்தை இணையதளத்தில் பார்த்துவிட்டு பாராட்டியவருக்கு சமூக வலைத்தளத்தில் பதில் அளித்துள்ள சேரன், “தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய் சேதுபதியோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை.

ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது. அண்ணன்களும், தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழிவிடுமா காலம்” என்று கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. இது தவமாய் தவமிருந்து படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

The post விஜய் சேதுபதிக்காக கதையுடன் காத்திருக்கும் சேரன்! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
https://www.tamilliveinfo.com/archives/53642/feed 0 53642
‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்’ – மல்யுத்த வீரர் சுஷில்குமார் நம்பிக்கை! https://www.tamilliveinfo.com/archives/53639 https://www.tamilliveinfo.com/archives/53639#respond Tue, 07 Apr 2020 16:30:07 +0000 https://www.tamilliveinfo.com/?p=53639 இந்திய மூத்த மல்யுத்த வீரர் சுஷில்குமார், 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கமும், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில்…

The post ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்’ – மல்யுத்த வீரர் சுஷில்குமார் நம்பிக்கை! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
இந்திய மூத்த மல்யுத்த வீரர் சுஷில்குமார், 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கமும், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கம் வென்ற ஒரே இந்தியர் சுஷில்குமார் தான்.

இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றில் 74 கிலோ உடல் எடைப்பிரிவில் அவர் தடுமாற்றம் கண்டார். அவருக்குரிய வாய்ப்பு வெகுவாக மங்கி போய் இருந்தது. இந்த சூழலில் கொரோனா அச்சத்தால் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் டோக்கியோவில் நடக்க இருந்த ஒலிம்பிக் திருவிழா அடுத்த ஆண்டுக்கு (2021) தள்ளிவைக்கப்பட்டது. இதனால் 36 வயதான சுஷில் குமாருக்கு மறுபடியும் ஒலிம்பிக் வாய்ப்பு துளிர்விட்டுள்ளது. இது தொடர்பாக அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

மல்யுத்தத்தில் இனி சுஷில்குமார் கதை முடிந்தது, அவரால் ஜொலிக்க முடியாது என்று சொல்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அது என்னை எந்த வகையிலும் பாதிக்காது. இப்போதைக்கு நான் எங்கும் போகப்போவதில்லை. ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டதால் எனக்கு கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது. அதாவது இன்னும் சிறப்பாக தயாராக நேரம் கிடைத்திருக்கிறது.

மல்யுத்த விளையாட்டை பொறுத்தவரை காயமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், நன்கு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி உழைக்க வேண்டும். இதை சரியாக செய்தால் இலக்கை அடைய முடியும். இப்போது நான் தினமும் வீட்டில் இரண்டு முறை பயிற்சியில் ஈடுபடுகிறேன்.

மல்யுத்தத்திற்கு ஏற்ப என்னை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன். கடவுளின் கருணையோடு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு என்னால் தகுதி பெற முடியும். தகுதி சுற்றில் என்னால் வெற்றி பெற முடியுமா? என்று கேட்கிறீர்கள். 2011-ம் ஆண்டு இதே போல் தான் சொன்னார்கள். அப்போது சாதித்து காட்டினேன். எனவே இது போன்ற சூழலை எப்படி எதிர்கொள்வது என்பது எனக்கு தெரியும்.

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய சக வீரர் நார்சிங் யாதவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு கால தடை ஜூலை மாதத்துடன் நிறைவடைவதால், அவரை தகுதி சுற்றில் எதிர்கொள்ள வேண்டியது இருக்குமே என்று கேட்கிறீர்கள். அதற்குரிய நேரம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். மீண்டும் தனது மல்யுத்த வாழ்க்கையை தொடங்க இருக்கும் அவருக்கு எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

சக இந்திய வீரர்களைத் தான் நீங்கள் கடுமையான போட்டியாளராக கருதுகிறீர்களா என்று கேட்கிறீர்கள். எப்போதும் சிறிய அளவில் யோசித்தால் நீங்கள் எதுவும் சாதிக்க முடியாது. சர்வதேச அளவிலான வீரர்களைத் தான் நான் பிரதான எதிராளிகளாக பார்க்கிறேன்.

குறிப்பாக ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் வீரர் பெக்ஜோட் அப்துராக்மோனோவை வலுமிக்க எதிராளியாக கருதுகிறேன். அவர் சிறந்த வீரர். அவர் போன்ற வீரர்களை மனதில் வைத்து என்னை தயார்படுத்திக் கொள்கிறேன். இவ்வாறு சுஷில்குமார் கூறினார்.

The post ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்’ – மல்யுத்த வீரர் சுஷில்குமார் நம்பிக்கை! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
https://www.tamilliveinfo.com/archives/53639/feed 0 53639
டெல்லியில் நடக்க இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து! https://www.tamilliveinfo.com/archives/53636 https://www.tamilliveinfo.com/archives/53636#respond Tue, 07 Apr 2020 16:26:01 +0000 https://www.tamilliveinfo.com/?p=53636 உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் மார்ச் மாதம் நடக்க இருந்தது. கொரோனா பீதியால் இந்த போட்டி மே மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் நாளுக்கு…

The post டெல்லியில் நடக்க இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் மார்ச் மாதம் நடக்க இருந்தது. கொரோனா பீதியால் இந்த போட்டி மே மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் வீரர்கள், ரசிகர்களின் பாதுகாப்பு நலன் கருதி மே 5-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்ட இந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து செய்யப்படுவதாக இந்திய தேசிய ரைபிள் சம்மேளனம் நேற்று அறிவித்தது.

இதே போல் பேட்மிண்டன் போட்டிகள் அனைத்தும் ஜூலை மாதம் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் நடக்க இருந்த ஆஸ்திரேலிய ஓபன், தாய்லாந்து ஓபன், இந்தோனேஷிய ஓபன் ஆகிய தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில் நடைபெற இருந்த பல ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளும் ரத்தாகியுள்ளன.

The post டெல்லியில் நடக்க இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரத்து! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
https://www.tamilliveinfo.com/archives/53636/feed 0 53636
விளையாட்டு பிரபலங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி – கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்தும்படி வேண்டுகோள்! https://www.tamilliveinfo.com/archives/53633 https://www.tamilliveinfo.com/archives/53633#respond Tue, 07 Apr 2020 16:18:05 +0000 https://www.tamilliveinfo.com/?p=53633 உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நமது நாட்டிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக வருகிற 14-ந் தேதி வரை 21…

The post விளையாட்டு பிரபலங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி – கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்தும்படி வேண்டுகோள்! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நமது நாட்டிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக வருகிற 14-ந் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் தங்களை, தாங்களே தனிமைப் படுத்தி கொள்வதுடன், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்றும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி இருக்கின்றன.

அரசின் இந்த அறிவுரையை அனைத்து தரப்பினரும் பின்பற்றி கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று விளையாட்டு பிரபலங்கள் உள்பட பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று வீடியோகான்பரன்ஸ் மூலம் இந்தியாவை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விளையாட்டு பிரபலங்களுடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சச்சின் தெண்டுல்கர், கங்குலி, டோனி, விராட்கோலி, ரோகித் சர்மா, ஷேவாக், யுவராஜ் சிங் (அனைவரும் கிரிக்கெட்) , விஸ்வநாதன் ஆனந்த் (செஸ்), பி.டி.உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ், ஹிமாதாஸ் (தடகளம்), யோகேஷ்வர் தத், பஜ்ரங் பூனியா (மல்யுத்தம்), பி.வி.சிந்து (பேட்மிண்டன்), மேரிகோம் (குத்துச்சண்டை), ராணி ராம்பால் (ஆக்கி), தீபிகா குமாரி (வில்வித்தை), சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), ரோகன் போபண்ணா (டென்னிஸ்) உள்பட 40-க்கும் அதிகமான விளையாட்டு பிரபலங்கள் மற்றும் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ ஆகியோர் பங்கேற்றனர்.

விளையாட்டு பிரபலங்களுடன் முதல்முறையாக மோடி நடத்திய இந்த வீடியோகான்பரன்சில் பங்கேற்றவர்களில் பலர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஆலோசனைகளையும், கருத்துகளையும் பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது அவர்களிடம் பேசிய மோடி, ‘கொரோனா தடுப்பு விழ்ப்புணர்வு பிரசாரத்தில் விளையாட்டு உலகினர் அளித்து வரும் பங்களிப்பு பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் எல்லா தரப்பினரிடமும் ஆழமாக சென்றடையும் வகையில் மேலும் இதனை தீவிரப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று செயல்பட தயார் என்று விளையாட்டு பிரபலங்கள் உறுதி அளித்தனர்.

பிரதமருடன் பேசியது குறித்து தெண்டுல்கர் கருத்து தெரிவிக்கையில், ‘நான் நம்புவது போலவே ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் அஜாக்கிரதையாக இருக்காமல் மேலும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று பிரதமரும் சுட்டிக்காட்டினார். ஊரடங்கிற்கு பிந்தைய காலத்தை நாம் எப்படி கையாள்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா பிரச்சினையில் இருந்து விடுபட்ட பிறகும் வாழ்த்து தெரிவிப்பதற்கு நம்மால் முடிந்த அளவுக்கு கை குலுக்குதலை தவிர்த்து கைகூப்பி நமஸ்தே (வணக்கம்) தெரிவிக்கும் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் கூறினேன்’ என்றார்.

கலந்துரையாடலுக்கு பிறகு இந்திய தடகள வீராங்கனை ஹிமாதாஸ் அளித்த பேட்டியில், ‘எங்களுடன் பிரதமர் கலந்துரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஊரடங்கை மதிக்காத சிலர் டாக்டர்களை தாக்கும் காட்சிகளை பார்க்கையில் வேதனை அளித்தது என பிரதமரிடம் தெரிவித்தேன்’ என்று கூறினார்.

The post விளையாட்டு பிரபலங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி – கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்தும்படி வேண்டுகோள்! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
https://www.tamilliveinfo.com/archives/53633/feed 0 53633
ரசிகர்கள் இன்றி கிரிக்கெட் போட்டி – வக்கார் யூனிஸ் எதிர்ப்பு! https://www.tamilliveinfo.com/archives/53630 https://www.tamilliveinfo.com/archives/53630#respond Tue, 07 Apr 2020 16:13:25 +0000 https://www.tamilliveinfo.com/?p=53630 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான வக்கார் யூனிஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- ‘ரசிகர்கள் இன்றி மூடப்பட்ட மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகள்…

The post ரசிகர்கள் இன்றி கிரிக்கெட் போட்டி – வக்கார் யூனிஸ் எதிர்ப்பு! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான வக்கார் யூனிஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

‘ரசிகர்கள் இன்றி மூடப்பட்ட மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகள் சீக்கிரமாக தொடங்கப்பட வேண்டும் என்ற யோசனையை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள தற்போதைய சூழலில், இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்படுவதற்கு சரியான தருணம் கிடையாது. ஏதாவது ஒரு கட்டத்தில் இது போன்ற அம்சங்கள் குறித்து நாம் யோசிக்க வேண்டியது அவசியம் தான்.

என்னை பொறுத்தவரை கிரிக்கெட் போட்டிகள் மறுபடியும் நடப்பதற்கு 5-6 மாதங்கள் ஆகும் என்று நினைக்கிறேன்.

உலகம் முழுவதும் தற்போதைய மோசமான நிலைமை கட்டுக்குள் வந்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும்போது பூட்டப்பட்ட மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து சிந்திக்கலாம்.

நான் ஒரு வீரராக அல்லது பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியில் அங்கம் வகிக்கும் போதெல்லாம் ஐ.சி.சி. கோப்பையை வெல்வதை பார்க்க வேண்டும் என்பதில் அதீத ஆவலுடன் இருப்பேன்.

அதனால் தான் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி எனக்கும், அணிக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ரசிகர்கள் இன்றி கிரிக்கெட் போட்டி – வக்கார் யூனிஸ் எதிர்ப்பு! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
https://www.tamilliveinfo.com/archives/53630/feed 0 53630
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சிறந்த அணி சென்னையா? மும்பையா? – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து https://www.tamilliveinfo.com/archives/53627 https://www.tamilliveinfo.com/archives/53627#respond Tue, 07 Apr 2020 16:08:38 +0000 https://www.tamilliveinfo.com/?p=53627 8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு…

The post ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சிறந்த அணி சென்னையா? மும்பையா? – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்க இருந்த தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, டோனி தலைமையிலான முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்க இருந்தது.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டி உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன. கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந் தேதி வரை தள்ளி வைக்கப்படுவதாகவும், அதன் பிறகு நிலவும் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதால் ஐ.பி.எல். போட்டி நடைபெறுவது பெருத்த கேள்விக்குறியாகவே இருக்கிறது. இருப்பினும் சகஜ நிலை திரும்பி இந்த போட்டி அரங்கேறும் என்று வீரர்களும், ரசிகர்களும் நம்பிக்கையுடன் காத்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிகரமான அணிகளாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளில் சிறந்தது எது? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்த போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

‘கடந்த 12 வருடங்களாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஒரு அணியை மதிப்பிடுவதற்கு அதன் வெற்றி சதவீதத்தை பார்ப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கும். அந்த வகையில் அதிக வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் முதலிடத்தில் இருந்தது.

ஆனால் கடந்த சில வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப்பட்டியலில் வேகமாக முன்னேறி இருப்பதுடன், அதிகமாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் கோப்பையை கைப்பற்றி இருக்கின்றன. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறைவான ஐ.பி.எல். போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறது.

கடந்த சில வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணி வளர்ந்து வரும் விதத்தை பார்க்கையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதிக்கத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்சை விட, மும்பை இந்தியன்ஸ் சிறந்த அணியாக விளங்குவதுடன், இறுதிப்போட்டியில் அந்த அணியை அதிக முறை வீழ்த்தி இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி எப்பொழுது இறுதிப்போட்டிக்குள் நுழைந்தாலும் பெரும்பாலும் வெற்றியை தனதாக்கி விடுகிறது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அந்த அளவுக்கு வெற்றியை பெறுவதில்லை.

ஒட்டு மொத்த ஐ.பி.எல். போட்டியை வைத்து பார்க்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் முதலிடத்தில் இருக்கும். ஆனால் சமீபகாலங்களில் பார்த்தால் சென்னை அணியை விட, மும்பை இந்தியன்ஸ் சற்று முன்னிலையில் உள்ளது எனலாம். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018-ம் ஆண்டுகளில் ஐ.பி.எல். கோப்பையை தனதாக்கியது. தடை காரணமாக 2016, மற்றும் 2017-ம் ஆண்டுகளில் அந்த அணி இந்த போட்டியில் விளையாடவில்லை. சென்னை அணி மொத்தம் 165 போட்டிகளில் விளையாடி 100 வெற்றி, 64 தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

மும்பை இந்தியன்ஸ் 2013, 2015, 2017, 2019-ம் ஆண்டுகளில் மகுடம் சூடி, ஐ.பி.எல். கோப்பையை அதிக முறை வென்ற அணி என்ற பெருமையை தன்வசப்படுத்தியது. 187 போட்டிகளில் விளையாடி இருக்கும் அந்த அணி 109 வெற்றி, 78 தோல்வி பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறை (2013, 2015, 2019) சென்னையை வீழ்த்தி இருக்கிறது.

மற்றொரு முறை புனே அணியை (2017) சாய்த்து இருந்தது. ஐ.பி.எல். போட்டி தொடரில் மும்பை-சென்னை அணிகள் 28 தடவை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை அணி 17 முறையும், சென்னை அணி 11 தடவையும் வென்று இருக்கின்றன. இந்த போட்டி தொடரில் சென்னை அணி, மும்பையிடம் தான் அதிக முறை தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சிறந்த அணி சென்னையா? மும்பையா? – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
https://www.tamilliveinfo.com/archives/53627/feed 0 53627
மைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்! https://www.tamilliveinfo.com/archives/53624 https://www.tamilliveinfo.com/archives/53624#respond Tue, 07 Apr 2020 15:59:10 +0000 https://www.tamilliveinfo.com/?p=53624 பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளர் மைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளை கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட…

The post மைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளர் மைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.

தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளை கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின், தற்போது சுயமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.

கோவ் இற்கு எந்த அறிகுறிகளும் இல்லை, எனினும் தனது வீட்டிலேயே தங்கி, தற்போதைக்கு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். இன்று காலை தனது வீட்டிலிருந்து ஸ்ரூடியோக்களுக்குச் செல்வதற்குப் பதிலாக   வீட்டில் இருந்தவாறே நாளாந்த தகவல்கis கோவ் ஒளிபரப்பு செய்துள்ளார்.

The post மைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
https://www.tamilliveinfo.com/archives/53624/feed 0 53624
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 854 மரணங்கள் பதிவாகின! https://www.tamilliveinfo.com/archives/53621 https://www.tamilliveinfo.com/archives/53621#respond Tue, 07 Apr 2020 15:55:12 +0000 https://www.tamilliveinfo.com/?p=53621 பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கி 854 மரணங்கள் பதிவாகியுள்ளதாக NHS தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து பிரிட்டணின் மொத்த இறப்புகள் 6,227 ஆக அதிகரித்துள்ளது.…

The post பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 854 மரணங்கள் பதிவாகின! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கி 854 மரணங்கள் பதிவாகியுள்ளதாக NHS தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து பிரிட்டணின் மொத்த இறப்புகள் 6,227 ஆக அதிகரித்துள்ளது. ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 96 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இங்கிலாந்தில் மரணித்தவர்கள் 23 முதல் 102 வயதுக்கு உட்பட்டவர்கள், அவர்களில் 29 பேர் – 23 முதல் 99 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கும் தகவல்கள் இவர்களின் அடிப்படை சுகாதார நிலைமைகள் குறித்து எதுவும் தெரியாது என குறிப்பட்டுள்ளன.

நேற்று அறிவிக்கப்பட்ட 437 பேரின் இறப்பு எண்ணிக்கையில் இருந்து கிட்டத்தட்ட இன்றைய எண்ணிக்கை இரு மடங்காகும், மேலும் இது தொற்றுநோய்க்கு எதிரான போரில் பிரிட்டனுக்கு ஒரு புதிய சவாலையும் இறங்கு முகத்தையும் கொடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், எதிர் வரும் வாரங்களில், பரவுகையும், மரணங்களும் உச்சமடையலாம் எனவும், குறிப்பாக ஈஸ்டரை அண்மித்த கணித்துள்ளனர், ஏழு நாட்கள் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.

The post பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 854 மரணங்கள் பதிவாகின! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
https://www.tamilliveinfo.com/archives/53621/feed 0 53621
ட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு! https://www.tamilliveinfo.com/archives/53618 https://www.tamilliveinfo.com/archives/53618#respond Tue, 07 Apr 2020 15:42:01 +0000 https://www.tamilliveinfo.com/?p=53618 அமெரிக்காவுக்கு ஹைட்ரொக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை…

The post ட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
அமெரிக்காவுக்கு ஹைட்ரொக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸால் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார்.

மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா அதிக அளவில் வாங்கி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹைட்ரொக்ஸிகுளோராகுயின் உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்தது.

இதனால், அமெரிக்கா ஹைட்ரொக்ஸிகுளோராகுயின் மருந்துகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், அமெரிக்கா ஏற்கனவே கேட்டிருந்த ஹைட்ரொகிஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதேவேளை, ஏற்கனவே கேட்டிருந்த ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என ட்ரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post ட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு! appeared first on TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை.

]]>
https://www.tamilliveinfo.com/archives/53618/feed 0 53618