பிரித்தானியாவின் புதிய சுகாதாரத்துறை செயலாளராக சஜித் ஜாவிட் நியமனம்!

by News Editor
0 comment

பிரித்தானியாவின் புதிய சுகாதாரத்துறை செயலாளராக சஜித் ஜாவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் கடந்த ஆண்டு திறைச்சேரியின் முன்னாள் தலைவரும் உட்துறை செயலாளராக இருந்தபோது அதிகார மோதல் காரணமாக பதவியை இராஜினாமா செய்த சஜித் ஜாவிட், தற்போது மீண்டும் அமைச்சர் சபையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது பதவியை ஏற்ற சஜித் ஜாவிட், சமூக முன்னோடி விதிகளை மீறி இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் மாற் ஹான்காக்கைப் அவரது சேவைக்காக பாராட்டினார்.

அத்துடன் ‘சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு மாநில செயலாளராக கௌரவ சஜித் ஜாவிட், செயலாளராக நியமிக்கப்படுவதற்கு ராணி மகிழ்ச்சியடைந்துள்ளார்’ என அரசாங்க அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து மாற் ஹான்காக் தனது பதவியை இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment