துளசி வழிபாட்டு ஸ்லோகம்

by News Editor
0 comment

துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.

கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டார். அந்த நாளை ‘பிருந்தாவன துளசி’ அல்லது ‘துளசிக்கல்யாணம்’ எனக் கொண்டாடுவார்கள். அன்று காலை சுமங்கலிப் பெண்கள் குளித்துவிட்டு, துளசி மாடத்தை சுற்றி மெழுகி, கோலமிட்டு காவி பூச வேண்டும்.

ஸெளமங்கல்யம் தனைஸ்வர்யம் புத்ர பெளத்ராதி ஸம்பதம் துளஸ்யம்ருத ஸம்பூதே தேஹி மே பக்தவத்ஸல.. .

மஹா விஷ்ணு துளசியை புகழ்ந்து போற்றிய
பிருந்தா பிருந்தாவனீ, விஸ்வபூஜிதா விஸ்வபாவநி, புஷ்பஸாரா, நந்தினி, துளசி க்ருஷ்ண ஜீவனீ ஏதன் நாமாஷ்டகஞ்சைவ ஸ்தோத்ரம் நாமார்த்தம் ஸம்யுதம்
ய: படேத் தாஞ்ச ஸம்பூஜ்ய ஸோஸ்வமேத பலம் லபேத்.
என்பதையும் சொல்லவும்.,

பிருந்தை என்பது மரங்கள் நெருங்கி அடர்ந்திருப்பதை குறிக்கும். .
துளசி ஓரிடத்தில் நெருங்கி அடர்ந்திருப்பதால் பிருந்தை என கூறுகிறார்கள்.
எவள் முற்காலத்தில் பிருந்தாவனந் தோறும் இருந்து பிருந்தாவனீ எனப்பெயர்
பெற்றாளோ ; எவள் அகில ப்ரபஞ்சத்தினால் பூஜிக்கப்பட்டு விஸ்வபூஜிதை என பெயர் பெற்றாளோ எவளால் எண்ணற்ற ப்ரபஞ்சமெல்லாம் பரிசுத்தமாகி விஸ்வபாவனீ என ப்பெயர் பெற்றாளோ ; மலர்களின் மீது ப்ரீதியுடைய
தேவர்களும் அவைகளால் ஆனந்தமடையாமல் உன்னாலேயே ஆனந்தமடைவதால் புஷ்பஸாரை என்றும்; பெயர் பெற்றாய். அடைந்ததுமே ஆனந்தத்தை அளிக்கும் தன்மையால் நந்தினி என்ற பெயர் பெற்றாய்;
கிருஷ்ணன் உன்னால் உருக்கொண்டு வாழ்வதால் கிருஷ்ணஜீவனீ என்ற பெயர் பெற்றாய்.

Related Posts

Leave a Comment