பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

by Lifestyle Editor
0 comment

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் முதன்முறையாக இன்று டெல்லிக்கு சென்று இருக்கிறார். இதற்காக காலை 7 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றடைந்த அவர், 7:20 மணிக்கு தனி விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டார். ஸ்டாலினின் வருகையை ஒட்டி ட்விட்டரில் #delhiwelcomesstalin என்ற ஹேஸ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகியது. டெல்லி சென்றடைந்த ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கிருந்து காரில் டெல்லி ஓடிஐஎஸ் பகுதிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அறிவாலயம் கட்டிட பகுதிக்கு சென்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து நேராக முதல்வர்கள் தங்கம் இல்லத்திற்கு சென்ற அவர் மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி, பிரதமர் மோடியை சந்திப்பதற்காக சரியாக 4.45 மணிக்கு முதல்வர் இல்லத்திலிருந்து புறப்பட்டார்.

இந்த நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்துள்ளார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், எழுவர் விடுதலை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment