நேர்முகத்தேர்வுக்கான 10 கட்டளைகள்

by Lifestyle Editor
0 comment

முதல் வேலைவாய்ப்போ, வேறு வேலைக்கு மாறுவதற்கான முயற்சியோ… எதுவாக இருந்தாலும், நேர்முகத்தேர்வு கடினமாக இருக்கலாம். உடை, நடந்துகொள்ளும் விதம் என அனைத்தும் அபிப்ராயம் ஏற்படுத்துவதில் தாக்கம் செலுத்துகின்றன. “வேலைவாய்ப்பு பெறுவது என்பது நிறுவனங்களிடம் உங்களை நீங்களே மார்கெட்டிங் செய்வதாகும். எதிர்பார்க்கப்படும் கேள்விகளுக்கு எப்படி பதில் தர வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும்” என் கிறார் எழுத்தாளரான ரச்னா சர்மா. முன்தயாரிப்பு உங்களுக்கு உதவும்.

செய்ய வேண்டியவை

1 முன்பே செல்லவும்

நேர்முகத் தேர்வுக்கு தாமதமாக வருவது போல தவறு வேறில்லை. போக்குவரத்து நெரிசல் பற்றிய காரணங்களை கேட்டுக்கொள்ள யாரும் தயாராக இல்லை. “அலுவலகம் இருக்கும் இடம் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். வழி தெரியவில்லை என்றால் நிறுவன அதிகாரிகளிடம் கேட்பதை தவிர்க்கவும். ஒரு செயலை முடிக்கும் ஆற்றலை இது சந்தேகிக்க வைக்கும்” என்கிறார் ரச்னா.

2 ஆய்வு செய்யுங்கள்

நிறுவனம் பற்றி அதிக தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். “உங்களுக்கு எவ்வளவு தகவல்கள் தெரிந்திருக்கிறதோ அந்த அளவுக்கு உங்களை சிறப்பாக மார்க்கெட்டிங் செய்ய முடியும்” என்கிறார் தில்லியின் வேலை வாய்ப்பு ஆலோசனை நிறுவனமான கே.பி.இ இந்தியா நிர்வாக இயக்குனர் ஜோதிகா பேடி.

3 ஆடையில் நேர்த்தி

முதல் சந்திப்பிலேயே உங்களைப்பற்றி ஆழமாக தெரிந்துகொள்வது தேர்வாளருக்கு சாத்தியமில்லை. ஆனால் நீங்கள் உடை அணிந்து வரும் விதத்தை வைத்து உங்களைப்பற்றி தீர்மானிப்பார்கள். ஃபார்மலாக உடையில் செல்லவும்.

4 தயாராக செல்லவும்

உங்கள் ரெஸ்யூம் போன்றவற்றை கையில் வைத்திருங்கள். தேவை எனில் அவை பற்றி விளக்கிக் கூறுங்கள். “தேர்வாளருக்கு உங்களை பற்றி எதுவும் தெரியாது என்றோ அல்லது ரெஸ்யூமை படித்திருப்பார் என்றோ நீங்களாக முடிவு செய்ய வேண்டாம்” என்கிறார் ரச்னா. “நீங்கள் நன்றாக தயார் செய்து கொண்டு வந்திருப்பதை உணர்த்தும் வகையில் அர்த்தமுள்ள கேள்விகளை கேளுங்கள்.’’

5 தெளிவாகப் பேசுங்கள்

“உங்கள் பின்னணி பற்றி துல்லியமாக சில உதாரணங்கள் மூலம் உணர்த்தவும். உங்கள் கடந்த கால செயல்பாடுகள் எதிர்கால பொறுப்புக்கான வாய்ப்பை உணர்த்தும்” என்கிறார் ஜோதிகா. உங்கள் ஆற்றல் பற்றி எடுத்துக்கூற தயங்க வேண்டாம். உங்களிடம் தெளிவான இலக்கு இருப்பதை தெரிந்து கொள்ளட்டும்.

6 தொடர்புகொள்ளுங்கள்

தேர்வாளரிடம் தொடர்ந்து பேசுவதற்காக விசிட்டிங் கார்டை தவறாமல் பெற்றுக்கொள்ளவும். “நேர்முகத்தேர்வுக்கு பிறகு தொடர்பு கொண்டு பேசுவது அவசியம்”

செய்யக்கூடாதவை

7 பொய் வேண்டாம்

பொய்யான தகவல்களை சொல்லக்கூடாது. பலரும் அந்த நேரத்தின் நெருக்கடியில் இவ்வாறு செய்வதுண்டு. “இன்றைய தகவல் யுகத்தில் நீங்கள் சொல்லும் எந்த தகவலையும் சரி தானா என உறுதி செய்துகொள்வது எளிது. பின்னர் விளக்கம் அளித்து கொண்டிருப்பதைவிட முதலிலேயே வெளிப்படையாக இருந்துவிடுவது நல்லது” என்கிறார் ரச்னா.

8 அவதூறு வேண்டாம்

உங்கள் முந்தைய நிறுவனம் மோசமானதாக இருக்கலாம். ஆனால் புதிய நிறுவன அதிகாரி அதை அறிய வேண்டிய அவசியமில்லை. மேலும் அது உங்கள் புதிய வேலைக்கும் தேவையில்லாதது.

9 விடுமுறை கேள்விகள்

நீங்கள் கடினமான உழைக்க தயாராக இருக்கலாம். ஆனால் அதற்காக விடுமுறை பற்றி எல்லாம் தேர்வாளரிடம் கேட்பது சரியல்லை. இது பற்றி முன்னதாகவே ஆன்லைனில் தெரிந்துகொண்டு அது ஏற்றதாக இருக்கிறதா என பார்க்கலாம்.

10 நிழல்கள் ஜாக்கிரதை

“கண்களை நேராக பார்த்து பேசாதது, உடல்மொழி சரியாக இல்லாதது, பலவீனமாக கைகுலுக்கல், கைகளை கட்டிக்கொள்வது எல்லாமே எதிர்மறையானவை”

Related Posts

Leave a Comment