இந்தியாவுக்கான தடையை நீட்டித்த பிலிப்பைன்ஸ்!

by Lifestyle Editor
0 comment

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளுக்கு இடையேயான பயணத்துக்கு தடை விதித்துள்ளன. அந்த வகையில் இந்தியா உட்பட ஏழு நாடுகளுக்கு பயணிக்க பிலிப்பைன்ஸ் நாடு தடை விதித்திருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் இந்த தடையை நீட்டித்துள்ளது.

இது குறித்து பிலிப்பைன்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கான பயண தடையே வரும் ஜூன் 30 தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

கொரோனா காரணமாக இந்த நாடுகளுக்கிடையே பயண தடை விதிக்கப்படுவது மூன்றாவது முறையாகும். இந்தியாவில் பரவிவரும் டெல்டா கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து பயணிகள் நுழைவதைக் கட்டுப்படுத்த பிலிப்பைன்ஸ் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

Related Posts

Leave a Comment