தடுப்பு மருந்துகளிடமிருந்து எஸ்கேப்… அடுத்த வில்லனை களமிறக்கிய கொரோனா

by Lifestyle Editor
0 comment

கொரோனா முதல் அலையின்போது ஒரே மாதிரியான வைரஸே உலகம் முழுவதும் பரவலுக்குக் காரணமாக அமைந்தது. ஆனால் இரண்டாம் அலையில் பல்வேறு வகையான உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ்கள் உருவாகி பரவ தொடங்கின. வைரஸ்களின் இயல்பே தங்களை உருமாற்றம் செய்துகொள்வது தான். அவ்வாறு உருமாறும்போது அதன் தீவிரமும் பரவும் வேகமும் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். இதேபோல பிரிட்டன், தென்ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் வைரஸ்கள் உருமாற்றமடைந்தன.

இவற்றுக்கென்று அறிவியல் பெயர்கள் இருந்தாலும் அனைவரும் பொதுவாக அழைக்கும் வார்த்தைகளை உலக சுகாதார அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பிரிட்டனில் கொரோனா வைரஸான B.1.1.7 வைரஸை ஆல்ஃபா என்றும், தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய B.1.351 வைரஸுக்கு பீட்டா என்றும், பிரேசிலில் கண்டறியப்பட்ட வைரஸுக்கு காமா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இரு வைரஸ்கள் கண்டறியப்பட்டன. B.1.617.1 வைரஸுக்கு கப்பா என்றும், B.1.617.2 வைரஸுக்கு டெல்டா என்றும் பெயரிட்டது.

இருப்பதிலேயே இந்தியாவில் உருமாறிய டெல்டா கொரோனா தான் அதி தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. பிரிட்டனில் தற்போது மூன்றாம் அலை தொடங்குவதற்கான அறிகுறி கூட இந்த வகை வைரஸால் தான் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்தது. இச்சூழலில் இந்த டெல்டாவிலிருந்து உருமாறி டெல்டா பிளஸ் என்ற புதிய வைரஸ் தோன்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. B.1.617.2 உருமாற்றம் அடைந்து B.1.617.2.1 என மாறியிருக்கிறது. இது AY.1 என்றும் அழைக்கப்படுகின்றது.

டெல்டா பிளஸ் கொரோனா இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மட்டும் 36 டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாளம், துருக்கி, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பயணிக்கும் நபர்களிடமும் இந்த வகை வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இப்போது அதிகமாக பரவவில்லை. பெரும்பாலும் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவில் அதிகமாக காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

தற்போது தான் இது பரவ ஆரம்பித்திருப்பதால் அதன் தீவிரம் எப்படி இருக்கும், எந்த வேகத்தில் பரவும் என்பதற்கான தகவல்கள் இல்லை. தீவிர ஆராய்ச்சிக்குப் பின்னரே இவையனைத்தும் தெரியவரும். கொரோனா வைரஸ் படிப்படியாக உருமாறிக் கொண்டே வருவதன் மூலம் நாம் கொடுக்கும் தடுப்பூசிகளை எதிர்க்கும் சக்தியைப் பெறுகின்றன. இந்தப் புதிய வகை வைரஸ் immune escape வகையாக இருக்கலாம். இதன் காரணமாக கொரோனா சிகிச்சைக்கும் இரு மருந்துகளின் கலவையான காக்டெய்ல் சிகிச்சையிலிருந்து டெல்டா பிளஸ் எஸ்கேப் ஆகலாம். தடுப்பூசிகளை எதிர்த்துப் போராடக் கூடியதாகவும் இருக்கலாம். ஆகவே தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டாலும் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படலாம்.

Related Posts

Leave a Comment