செல்போனுக்கு வந்த மெசேஜை பார்த்து தப்பியோடிய 11 கொரோனா நோயாளிகள்…

by Lifestyle Editor
0 comment

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பாதிப்பு உறுதியாகும் பலர் மருத்துவமனைகளுக்கு வராமல் வீடுகளிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்வது நோய் தொற்று பரவலை அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கொரோனா தொற்று பாதித்த 11 வடமாநில தொழிலாளர்கள் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் மண்டல சுகாதார துறை ஆய்வாளராக இருக்கும் பாரதிராஜா, எஸ்டேட் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தடையை மீறி இயங்கியதாக தனது கம்பெனிக்கு சுகாதாரத்துறை சீல் வைத்ததாகவும் அங்கு வேலை செய்து வந்த 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதில் ஒருவரைத் தவிர 11 வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அவர்களது செல்போனுக்கு வந்த குறுந்தகவலை தெரிந்து கொண்டு அவர்கள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் ஒடிசாவை சேர்ந்த அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரிய வராததால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். அந்த புகாரின் பேரில் கொரோனா நோயாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment