செல்லப்பிராணியால் ராஷ்மிகாவுக்கு நண்பனாக மாறிய நடிகை

by Lifestyle Editor
0 comment

தனது செல்ல நாய் ஆராவுடன் நடிகை ராஷ்மிகா கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவின் ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமானவர். தமிழ், இந்தி படங்களில் நடித்து வரும் இவர், நடிகர் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’, ஜூனியர் என்டிஆருடன் ஒரு படம் என சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்தியில் ‘மிஷன் மஜ்னு’, ‘டெட்லி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதேபோன்று தமிழ் சினிமாவில் சிம்பு ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் ‘காதல் அழிவதில்லை’. இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்தவர் சார்மி. ஆனால் தமிழில் சரியான படங்கள் அமையாததால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கு அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக மாறினார். சில வருடங்களுக்கு முன்பு நடிப்பதிலிருந்து விலகிய சார்மி, தற்போது முழு நேர தயாரிப்பாளராகி திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் ஊடரங்கு காரணமான படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் நடிகர், நடிகைகள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக மும்பையில் வசித்து வரும் நடிகைகள் ராஷ்மிகாவும், சார்மியும், நடைப்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது இருவரும் தங்களது செல்லப்பிராணியுடன் சந்தித்து கொண்டனர். இதையடுத்து நண்பர்களாகிவிட்ட இருவரும் தங்களது செல்லப்பிராணிகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். ராஷ்மிகாவின் செல்ல நாயின் பெயர் ஆரா. சார்மியின் நாயின் பெயர் ‘ஐட்டம்’ என இருவரும் குறிப்பிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment