தேசிய விருது பெற்ற நடிகர் சாலை விபத்தில் மரணம்

by Lifestyle Editor
0 comment

பிரபல நடிகர் சஞ்ஜாரி விஜய் (38) டூவீலரில் சென்றபோது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் மோதி உயிரிழந்தார். மூளைச்சாவு அடைந்து பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கன்னட நடிகரான சஞ்ஜாரி விஜய், 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2014ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார்.

பெங்களூருவில் வசித்து வந்த சஞ்ஜாரி விஜய், சில தினங்களுக்கு முன் தனது நண்பருடன் டூவீலரில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் மோதி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட இருக்கின்றன.

சஞ்ஜாரி விஜய்யின் மரணத்திற்கு கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மரணத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment