பப்ஜி மதன் தலைமறைவு!

by Lifestyle Editor
0 comment

பப்ஜி எனும் ஆன்லைன் விளையாட்டு நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விபிஎன் எனும் பிரைவேட் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடிய மதன், தன்னுடன் விளையாட்டில் இணையும் சிறுவர், சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசுவதாக சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. மேலும் பெண்கள் பற்றி ஆபாசமாக பேசி மிரட்டுவது, இன்ஸ்டாகிராமில் சிறுமிகளிடம் ஆபாச வீடியோ கால் பேசுவது போன்ற வேலைகளிலும் மதன் ஈடுபட்டதாக தெரிகிறது.

ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசிய புகாரில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் யூடியூப் பப்ஜி மதன் தலைமறைவாகியுள்ளார். மதன், டாக்சிஸ் மதன் 18+ சேனல்களை முடக்க யூடியூப் நிறுவனத்துக்கு காவல்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர். இதனிடையே #ArrestMadhanOP என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலாகிவருகிறது.

Related Posts

Leave a Comment